மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, October 20, 2010

மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்

பூமியில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் முக்கிய நாட்களையும்
விடுமுறை தின தகவல்களையும் சில நிமிடங்களில் எளிதாக
நாம் தெரிந்துகொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

 

[caption id="attachment_3711" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

 

இறைவன் படைத்த பூமியில் ஓவ்வொரு நாட்டிற்கும் சில முக்கிய
தினங்களையும் விடுமுறை நாட்களையும் நாம் அமைத்து அந்த
தினத்தை கொண்டாடுகிறோம் இப்படி ஓவ்வொரு நாடுகளிலும் சில
முக்கிய தினங்கள் இருக்கின்றன இந்த அனைத்து தகவல்களையும்
சில நிமிடங்களில் நாம் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.earthcalendar.net

 

[caption id="attachment_3712" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

 

 

[caption id="attachment_3713" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

 

பூமியின் காலண்டர் என்ற பெயரில் இருக்கும் இந்ததளத்திற்கு சென்று
நாம் உலகத்தின் எந்த நாட்டின் முக்கிய நாட்களையும் விடுமுறை
தினத்தையும் சில நிமிடங்களில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும்
இன்றைய தினத்தில் என்ன முக்கியமான நாள் என்று நாம் இந்தத்
தளத்திற்கு சென்று எளிதாக அறியலாம். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
மூன்றாவது மெனுவாக இருக்கும் Holidays by Country என்ற
பொத்தானை அழுத்தி எந்த வருடம் , எந்த நாடு என்பதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Show Holidays என்ற பொத்தானை
அழுத்தி பார்க்காலம் (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது). இதே போல்
ஒவ்வொரு நாட்டிலும் வேவ்வேறு மதத்தவர்கள் கொண்டாடும்
அனைத்து பண்டிகைகளையும் எளிதாக அறியலாம். உலக நாடுகளின்
விடுமுறை தினத்தையும் முக்கிய நாட்களையும் அறிய விரும்பும்
நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
கட்சியின் சுயலாபத்துக்காக மக்களை ஏமாற்றுபவர்களுக்கு
சரியான பரிசு கிடைக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நிலப்பரப்பே இல்லாத பிரதேசம் எது ?
2.டர்பண்டைன்  எதிலிருந்து எடுக்கப்படுகிறது ?
3.ஆங்கிலக்கவிதையின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
4.அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளது ? 
5.இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் ரயில் பெயர் என்ன ?
6.மனித உடலில் நரம்புகளின் உணர்ச்சி வேகம் எவ்வளவு ?
7.மனித இனத்தின் சரியான கர்ப்ப காலம் எத்தனை நாட்கள்?
8.லாத்வியா நாட்டின் தலைநகரம் எது ?
9.எரிமலையில் உருவான அமெரிக்க மாநிலம் எது ?
10.பாம்பு தனது நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுவதன் காரணம்?
பதில்கள்:
1.வட துருவம், 2.பைன் மரத்தில் இருந்து, 3.ஜெப்ரிசரர்,
4.27 குகைகள்,5.டெக்கான் குயின், 6.மணிக்கு 300 கி.மீ,
7.280 நாட்கள்,  8.ரிகா, 9.ஹவாய்தீவு, 10.முகர்வதற்காக.


இன்று அக்டோபர் 20 
பெயர் : வீரேந்தர சேவாக் ,
பிறந்ததேதி : அக்டோபர் 20, 1978
இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத்
துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத்
துடுப்பாளராகக் களமிறங்குபவர்.1998-ல் ஒருநாள்
போட்டிகளிலும் 2001-ல் டெஸ்ட் போட்டிகளிலும்
இந்தியா சார்பாக அறிமுகமானார்.தென்னாபிரிக்காவுக்கு
எதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத்
துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச்
சாதனையாகும்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad