விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, September 30, 2010

விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி

உலக அளவில் நடக்கும் அத்தனை விளையாட்டு செய்திகளையும்
உங்கள் பிளாக்-ல் தெரிய வைக்கலாம்  அப்போதைய செய்திகள்
தானகவே மாறி கொண்டு இருக்கும். நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் இதை எப்படி சேர்க்கலாம் என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.


[caption id="attachment_3470" align="aligncenter" width="303" caption="படம் 1"][/caption]

விளையாட்டு செய்திகளை ஒவ்வொரு தளமாக சென்று பார்க்க
வேண்டி இருக்கிறது இந்த விளையாட்டு செய்திகளை என் பிளாக்-ல்
தெரிய வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும்
கூகுள் வெப் எலமெண்ட்ஸ் ( Google web elements ) - நமக்கு இந்த
சேவையை இலவசமாக கொடுக்கிறது. பல பேர் இந்த சேவையைப்
பயன்படுத்தி இருக்கலாம்.  வெப் எலமெண்ட்ஸ் பற்றி அறிய விரும்பும்
புதியவர்களுக்காக இந்தப்பதிவு.

முகவரி : http://www.google.com/webelements/news/

[caption id="attachment_3471" align="aligncenter" width="420" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_3472" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

கூகுள் வெப் எலமெண்ட்ஸ் -ன் இந்தப்பக்கத்திற்கு சென்று நாம்
படம் 2-ல் காட்டியபடி Size என்பதில் விரும்பும் அளவை தேர்ந்தெடுத்து
அடுத்து Sports என்பதை தேர்ந்த்டுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி Preview என்பது தெரியும்.  அடுத்து படம் 3-ல் காட்டியபடி
இருக்கும் கோடிங் -ஐ காப்பி செய்து நம் பிளாக் அல்லது இணைய
தளத்தில் எங்கு வேண்டுமோ அங்கு பயன்படுத்தலாம். வேர்டுபிரஸ்-ல்
இதைப்பயன்படுத்த இப்போதைக்கு அனுமதியில்லை.
வின்மணி சிந்தனை
மது அருந்துபவன் தன் சந்தோஷத்திற்காக தன் குடும்ப
அமைதியை கெடுக்கிறான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த நாட்டிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன ?
2.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை எது ?
3.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
4.ரஷ்யாவின் மிக நீளமான நதி எது ?
5.புனித பூமி என்று உலக அரங்கில் கூறப்படும் நாடு எது ?
6.சர்வதேச நதி எது ?
7.புறா எதனுடைய அடையாளமாக கருதப்படுகிறது ?
8.உலகிலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடு எது?
9.விசைத்தறியை கண்டுபிடித்த அறிவியல் வித்தகர் யார் ?
10.சேக்கிழாருக்கு எங்கு கோவில் உள்ளது ?

பதில்கள்:
1.தென் அமெரிக்கா, 2.திருவனந்தபுரம் -கெளஹாத்தி,3.கேரளா,
4.வால்கா, 5.பாலஸ்தீனம்,6.ரைன்,7.அமைதி, 8.இந்தியா,
9.ஸ்பின்டன்,10.குன்றத்தூர்.

இன்று செப்டம்பர் 30 
நாள் : செப்டம்பர் 30, 2003
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட நாள்

விக்கிப்பீடியா என்பது தளையற்ற உள்ளடக்
-கங்களைக் கொண்ட ஒரு இலவச வலைத்தளம்
மற்றும் கூட்டு முயற்சியால் பல மொழிகளில்
கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும்.
தமிழர்களுக்காக தன் சேவையை தமிழிலும் ஆரம்பித்த
மகத்தான நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

  1. thamilil news vara enna saiyanum

    ReplyDelete
  2. @ anbudan
    create one என்ற கட்டத்திற்குள் செய்திகள் என்று கொடுங்கள்
    தமிழ் செய்திகள் தெரியும்.
    நன்றி

    ReplyDelete
  3. thanks for ur reply

    செய்திகள் என்று கொடுthal Previw varaliya nanbara...

    ReplyDelete
  4. Sports என்பதை தேர்ந்த்டுத்துக்கொள்ள vendam ippo varukirathu nanbara..........
    tahks

    ReplyDelete
  5. enakku oru free website create pannanum... for education... pls help pannunga...!
    thank you..!

    ReplyDelete

Post Top Ad