பிடிஎப் கோப்பில் முக்கியமானவற்றை ஆன்லைன் மூலம் எடிட் செய்து கொள்ளலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, August 8, 2010

பிடிஎப் கோப்பில் முக்கியமானவற்றை ஆன்லைன் மூலம் எடிட் செய்து கொள்ளலாம்.

பிடிஎப் (PDF) கோப்பில் முக்கியமானவற்றை நாம் தேர்ந்தெடுத்து
ஆன்லைன் மூலம் எந்த பிடிஎப் மென்பொருளும் இல்லாமல் குறித்தும்
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



பிடிஎப் கோப்புகளில் பலவற்றை நாம் நம் கணினியில் சேமித்து
வைத்திருப்போம் ஆனால் அந்த கோப்பில் சில முக்கியமான வரிகளை
குறித்து (மார்க்) வைத்தால் அடுத்த முறை நாம் பார்க்கும் போது
எளிதாகவும் உடனடியாகவும் பார்க்கலாம். சில நேரங்களில் பிடிஎப்
கோப்பில் முக்கியமான படங்களுக்கு விளக்கம் கூட அருகில் எழுதி
வைத்துக்கொள்ளலாம் இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்றால்
இதெல்லாம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஆன்லைன்
மூலம் நாம் பிடிஎப் கோப்புகளை மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : https://www.pdfescape.com

[caption id="attachment_2941" align="aligncenter" width="253" caption="படம் 2"][/caption]

இந்தத் தளத்திற்கு சென்று நம் பிடிஎப் கோப்-ஐ அப்லோட் செய்ய
வேண்டியது தான் அடுத்து வரும் திரையில் நம் பிடிஎப் கோப்பினை
எளிதாக எடிட் செய்யலாம். படம் 2-ல் காட்டியபடி இடது பக்கம்
இருக்கும் ஐகானை சொடுக்கி எடிட் செய்த பிடிஎப் கோப்பை நம்
கணினியில் சேமித்து வைக்கலாம். பிடிஎப் மென்பொருள் இல்லாத
இடத்திலும் பிடிஎப் எடிட்டர் பயன்படுத்த தெரியாத புதியவர்களுக்கும்
இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நம்முடைய பொருளையோ எழுத்தையோ திருடுபவர்கள் அவரது
உயர்ந்த எண்ணத்தையும் பொருளையும் மறக்கின்றனர்.
இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் திருட மாட்டார்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.நமது உடலில் எத்தனை தசைகள் உள்ளன ?
2.இறக்கை இல்லாத பறவை எது ?
3.தாவரங்களில் அதிவேகமாக வளரக்கூடியது ?
4.உலகின் மிகப்பெரிய பீடபூமி எது ?
5.உலகப்புகழ் பெற்ற ஈபில் டவரில் எத்தனை படிக்கட்டுகள்
 உள்ளன?
6.மாலை விண்மீன் என்று அழைக்கப்படும் கிரகம் எது ?
7.இரண்டு பக்கமும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு எப்போது
அறிமுகப்படுத்தப்பட்டது ?
8.கங்கை ஆறு எங்கு உற்பத்தியாகிறது ?
9.இந்தியாவில் மேகம் சூழ்ந்த மாநிலம் எது ?
10.மனித உடலில் உணவுக்குழாயின் நீளம் என்ன ?

பதில்கள்:
1.630 தசைகள், 2.கிவி,3.மூங்கில், 4.திபெத்,
5.729 படிக்கட்டுகள்,6.வீனஸ் (வெள்ளி),7.1917 -ல்,
8.கங்கோத்திரி,9.மேகாலயா,10.30 அடி.

இன்று ஆகஸ்ட் 8 
பெயர் : ஸ்வெத்லானா சவீத்ஸ்கயா,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 8, 1948

முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை
ரஷ்யாவை சேர்ந்தவர் ஆவார். இவர் சல்யூட் டி-7
விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப்
பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற
இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா
முதலாவதாகச் சென்றார்).

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  2. @ Rajasurian
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. @ Balaji
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. Give me a Useful information like this..
    thanks

    ReplyDelete
  5. @ Abdula
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad