நம் பிளாக்-ல் ரீடுவிட் பொத்தான் வைத்து அதிக வாசகர்களை பெறலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, August 8, 2010

நம் பிளாக்-ல் ரீடுவிட் பொத்தான் வைத்து அதிக வாசகர்களை பெறலாம்.

நம் வலைப்பதிவை எல்லா இடங்களிலும் பரப்ப பல வழிவகை செய்து
வருகிறோம் அதில் ஒன்று தான் ரீடுவிட், இந்த ரீடுவிட் பொத்தனை நம்
தளத்தில் வைப்பதன் மூலம் எளிதாக தகவல் பரிமாற்றம் நடக்கும்
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



நம் வலைப்பூவில் உள்ள தகவல்களை படிக்கும் நபர்களுக்கு அந்த
தகவல் பிடித்திருந்தால் உடனடியாக ரீடுவிட் செய்து அந்த தகவலை
அவர்களின் நண்பர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் பரப்பலாம்
இதற்கான ரீடுவிட் (Retweet) பொத்தானை நம் பிளாக்-ல் சேர்க்கும்
வழிமுறையைப் பற்றிப்பார்ப்போம்.
ரீடுவிட் பொத்தான் வைப்பதில் இரண்டு முறை இருக்கிறது முதல்
முறை இதுதான் Default பொதுவான முறை.
உங்கள் பிளாக்கர் கணக்கை திறந்து கொள்ளவும் அடுத்து Designs
என்ற மெனுவை சொடுக்கி வரும் திரையில் Edit HTML என்ற
மெனுவை சொடுக்கவும். அடுத்து  <data:post.body/> என்ற Tag
எங்கு இருக்கிறது என்று தேடவும். வரும் முடிவில் இதற்கு முந்தைய
வரியில் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Script -ஐ கொடுக்கவும்
அவ்வளவு தான்.



முதல் முறை :

<script type="text/javascript">
tweetmeme_url = '<data:post.url/>';
</script>
<script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"></script>

இரண்டாவது முறை

<div style="float:left;padding: 6px 10px 6px 0px;">

<script type="text/javascript">

tweetmeme_url = '<data:post.url/>';

</script>

<script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"> </script>

</div>
எந்த ஸ்கிரிப்ட் வேண்டுமோ அதை கொடுத்து முடித்த பின்
Save Template  சொடுக்கி வெளியே வரவும். இப்போது நாம் செய்யும்
ஒவ்வொரு பதிவிலும் Retweet பொத்தான் வந்திருக்கும். கண்டிப்பாக
இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
புதிதாக நாம் ஒருவரை சந்திக்கும் போது முகத்தை
புன்னகையுடன் வைத்துக்கொள்ளுங்கள். நம் உள்ளத்தின்
பிரதிபலிப்பாக இருக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது ?
2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன ?
3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

பதில்கள்:
1.தாமரை, 2. 35%,3.கன்னியாகுமரி, 4.சுவா,
5.எட்வின் லட்யன்ஸ்,6.1927-ல்,7.பஞ்சாப்,
8.பெங்களுர்,9.ஆல்ஸ்மியர்,10.சண்டிகர்.

இன்று ஆகஸ்ட் 9
பெயர் : ஹேர்மன் ஹெசே,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 9, 1962

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. நமது டுவிட்டர் அக்கவுண்ட் பெயரை சேர்க்க தேவையில்லையா? அந்த ஸ்கிரிப்டை அப்படியே போட்டால் போதுமா!?

    ReplyDelete
  2. @ வால்பையன்
    ஆம் போதும், டுவிட்டர் அக்கவுண்ட் பெயரை சேர்க்க தேவையில்லை.
    நன்றி

    ReplyDelete
  3. @ வால்பையன்
    http://tweetmeme.com இந்தத் தளத்திற்கு சென்று sign in என்ற பொத்தனை சொடுக்கி உங்கள் டிவிட்டர் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து நுழைந்து அடுத்து வரும் திரையில் உங்கள் தளத்தில்
    சேர்க்க வேண்டிய Code கொடுக்கப்பட்டிருக்கும்.
    சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad