கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, August 24, 2010

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த
கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.

[caption id="attachment_3083" align="aligncenter" width="379" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_3084" align="aligncenter" width="345" caption="படம் 2"][/caption]

இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்
அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை
செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த
முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக
தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான
ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா
என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,
ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start - > Run
சென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்
ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய
வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்
போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.

[caption id="attachment_3085" align="aligncenter" width="455" caption="படம் 3"][/caption]

குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்
கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்
அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்.
வின்மணி சிந்தனை
பகையாளியாக இருந்தாலும் உதவி என்று நம்மிடம் வரும்போது
நாம் கண்டிப்பாக உதவ வேண்டும். எனென்றால் நாம் இந்த
பூமிக்கு வந்த விருந்தாளிகள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?

பதில்கள்:
1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.

இன்று ஆகஸ்ட் 24  
பெயர் : வே. இராமலிங்கம் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972

தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற
தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர்
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்
ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால்
ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே
விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

26 comments:

  1. // OSk - On Screen Keyboard
    It is really useful tip. Thanks!

    ReplyDelete
  2. @ S.Kalyanasundar
    நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் நன்றி வின்மணி

    சிறு உதவி

    1. சில நேரங்களில் நம் கணணியில் படித்து கொண்டு இருக்கும் போது குழந்தைகள் \ சிறுவர்கள் கீ போர்டின் ஏதாவது தட்டி விடுகின்றனர் இதனால் நம் படிப்பதற்கு தடை ஏற்படுகிறது எனவே ஏதாவது கீ போர்ட் லாக்கர் உள்ளதா ?

    2.அது போல் சில தளங்களின் எழுத்துகள் (fonts )படிப்பதற்கு மிக சிறிய அளவாக உள்ளது இதனால் கண்கள் எளிதில் சோர்வு அடைகிறது எனவே பொதுவாக எந்த தளத்தையும் நம் விரும்பிய அளவுகளில் எழுத்துகளை படிக்க ஏதாவது zooming software உள்ளதா ?

    நன்றி

    ReplyDelete
  4. // OSk – On Screen Keyboard
    It is really useful tip. Thanks!

    ReplyDelete
  5. supperrrrrrrrrrrrrrrrrrrb..really superb
    thank you very much

    ReplyDelete
  6. @ ♠புதுவை சிவா♠

    1. கீ லாக் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கிறது. பெரும்பாலானவை நம் க்டவுச்சொல் போன்ற தகவல்களை திருடுவதற்கா உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் சரியான மொன்பொருளைப் பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.

    2. Ctrl மற்றும் + கீயை அழுத்துங்கள் எழுத்து பெரியதாகும்

    Ctrl மற்றும் - கீயை அழுத்துங்கள் எழுத்து சிறியதாகும்

    நன்றி

    ReplyDelete
  7. @ Lenin
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. @ s.n.ganapthi
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. amarnath malli chandrasekaranAugust 25, 2010 at 7:38 AM

    article about the on screen keyboard is a very useful tip to all. thank you very much

    ReplyDelete
  10. மிகப் பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி.
    உடனே தேவைப்பட்ட ஒருவருக்குச் சொன்னேன், அவருக்கு மிக்க மகிழ்ச்சி.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  11. @ amarnath malli chandrasekaran
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. @ பாஸ்டன் ஸ்ரீராம்
    மிக்க நன்றி

    ReplyDelete
  13. OSk is really useful tip. Thanks!

    ReplyDelete
  14. கம்பன் சொப்ட்வேரில் இதுபோன்ற ஸ்கிரினில் தெரியும் கிபோர்ட் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது இன்னும் பயனான தகவல்.

    ReplyDelete
  15. @ ♠புதுவை சிவா♠
    நன்றி

    ReplyDelete
  16. @ தணிகாசலம்
    நன்றி நண்பரே..

    ReplyDelete
  17. Good one...

    But if the keyboard ( o/s/k ) key doesn't work proceed as follows,
    browse to ( the drive where u hv installed windows, here C:) C:\WINDOWS\system32 and click on "osk"

    ReplyDelete
  18. hello winmani, you should answer this Q :

    in fact the following keys are not working in a keyboard then, how all could use this feature..,

    faulty Keys are : O S K...

    ReplyDelete
  19. @Nanban
    பதிவை இரண்டு அல்லது மூன்று முறை சரியாக படியுங்கள் புரியும். குறிப்பிட்ட அந்த மூன்று கீ-களும் வேலை செய்யவில்லை என்றால் இதைப்பயன்படுத்த முடியாது.

    ReplyDelete

Post Top Ad