இன்று முதல் வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, August 25, 2010

இன்று முதல் வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்.

வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால
இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும்
மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன்
செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின்
சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த
செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது
நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில்
நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு
வேண்டுமானாலும் போன் செய்யலாம். Call Phone என்பது
இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை
கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம்
மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம்
நிர்ணயத்துள்ளது. கட்டணம் பற்றிய விபரங்கள் :

ஒரு நிமிடத்திற்கு
இந்தியா  :  $0.06
யுனைடட் அரபு நாடுகள் :  $0.19
மலேசியா  :  $0.02
பாகிஸ்தான்  :  $0.11
சிங்கப்பூர்  :   $0.02
சவுதி அரேபியா  :   $0.19


http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளலாம். ஜீமெயில் போன் கால் பற்றிய அறிமுக வீடியோ
ஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
நாளை நமக்கு சொந்தமில்லை இன்று மட்டுமே அதுவும்
இப்போது மட்டுமே நமக்கு சொந்தம் அதனால் எப்போதும்
முகத்தை புன்னகையோடு வைத்திருங்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இரத்தத்தின் முக்கிய பணி யாது ?
2.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்  எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
3.எந்த இரு நாள்கள் மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும்?
4.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியம் தற்போது எங்குள்ளது?
5.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் எது ?
6.தீபாவளி அன்று பிறந்த மத குரு யார் ?
7.வாசனைத் தபால் தலை வெளியீட்ட நாடு எது ?
8.உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது ?
9.மகாத்மா காந்தி எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ?
10.இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்?

பதில்கள்:
1.ஆக்சிஜனை எடுத்துச்செல்வது,2.1986,3.மார்ச் 21,
4.பாரிஸ் -லூவர் மியூசியம்,5.புகைபிடிப்பது,6.குருநாணக்,
7.தென்னாப்பிரிக்கா,8.திபெத்,9.1914,10.மேரிக்கியூரி அம்மையார்

இன்று ஆகஸ்ட் 25
பெயர் : கிருபானந்த வாரியார் ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906

சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக
சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"
என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

29 comments:

 1. Skype இன்னும் மலிவாக உள்ளதே.
  சரியாக தெரியாது, தெரிந்தவர்கள் ஒப்பிட்டு பார்த்து சொல்லவும்.

  ReplyDelete
 2. I think this facility is available only for US

  ReplyDelete
 3. இது SKYPE போன்றதா? அல்லது முன்னறிவிப்பின்றி தொலைபேசியிலோ அல்லது கைபேசியிலோ பேசுவதுபோல் பேசலாமா? கட்டணம் செலுத்துவது எப்படி! கிரேடிட் கார்டு வழியாகவா அல்லது வேறா? பிள்ளைகள் அமெரிக்காவிலோ வெளிநாட்டிலோ படிக்கும் பெற்றோர்களுக்குப் பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 4. I tried, But there is No calling options available in G CHAT... Let me Use and Compare with Skype.. But Skype audio quality is good as well as for 40 Countries within $13 all calls are free....

  ReplyDelete
 5. thank you very much for sharing this fruitful information.

  ReplyDelete
 6. Can we call from India (and Sri Lanka) to US and Canada for free? I dont think so. I think we should be in US/Canada to "use" this service.

  Winmani sir, can you please try some calls from India and give us information about this service?

  ReplyDelete
 7. @ shiva satish
  தற்போது எல்லா நாடுகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  நன்றி

  ReplyDelete
 8. @ தணிகாசலம்
  நண்பருக்கு ,
  ஆம் ஸ்கைப் போன்ற ஒன்று தான், கிரேடிட் கார்டு வழியாகவும் , பேபால் வழியாகவும் பணம் செலுத்தலாம். இப்போது அமெரிக்கா
  மற்றும் கனடாவிற்கு இலவசம் அழைத்துப்பாருங்கள்.
  நன்றி

  ReplyDelete
 9. @Raja
  கூகுள் ஆடியோ கிரிஸ்டல் குவாலிட்டி ,அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இலவசம் அழைத்துப்பாருங்கள்.
  நன்றி

  ReplyDelete
 10. Can we call from India (and Sri Lanka) to US and Canada for free? I dont think so. I think we should be in US/Canada to “use” this service.

  Winmani sir, can you please try some calls from India and give us information about this service?

  ReplyDelete
 11. I used gtalk, Skype, yahoo messenger, to talk with my friends in abroad.But Skype quality is good.

  ReplyDelete
 12. @ Abarajithan
  எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் அமெரிக்கா மற்றும் கனடா-வுக்கு தொடர்பு கொண்டாலும் இலவசம் தான்.
  பயன்படுத்திப் பார்த்து சொல்லுங்கள்.
  நன்றி

  ReplyDelete
 13. @ premcs23
  நண்பருக்கு சரிதான் , ஆனால் இப்போது கிரிஸ்டல் குவாலிட்டி என்று ஒன்றை சேர்த்திருக்கின்றனர். இதை நம் கணினியில் தரவிரக்க்கி இண்ஸ்டால் செய்து கொள்ள
  வேண்டுமாம். அதன் முகவரி :
  http://www.google.com/chat/voice/
  நன்றி

  ReplyDelete
 14. பிரேம் ஆனந்த்August 26, 2010 at 4:21 AM

  இந்த வசதி canada மற்றும் US ல் உள்ளவர்களுக்கு மட்டும் தான்.

  ReplyDelete
 15. @ பிரேம் ஆனந்த்

  சரிதான் பதிவை ஒரு முறை நன்கு பாருங்கள் ,
  Call anywhere in the US and Canada for free and get low rates for other countries
  நன்றி

  ReplyDelete
 16. @ amtuhakrishna
  அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவர்கள் எல்லா நாடுகளுடனும் பேசலாம்,
  மற்ற நாடுகளில் இது பயன்படுத்த முடியாது.
  நன்றி

  ReplyDelete
 17. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவர்கள் எல்லா நாடுகளுடனும் பேசலாம்,
  மற்ற நாடுகளில் இது பயன்படுத்த முடியாது.
  நன்றி!

  ஒகே மற்ற நாடுகளுக்கு எப்போ பயன் படுத்தமுடியும் ? கூடியசிக்கிரத்தில் மற்ற நாடுகளுக்கும் கிடைத்தால் நல்லது.

  ReplyDelete
 18. Dear winmani:

  india la na irukaen.. ipa na USE panna mudiyuma or NOT??
  ennuduya annan dubai la irukapla nanga RENDU perumae USE panna mudiyum or not..

  yaarachum ORU aalachuM use panna mudiyuma or not??

  plz winmani sir reply tiz msg

  ReplyDelete
 19. @ inamul hasan
  மூன்று கேள்விக்கும் ஒரே பதில் Not என்பது தான். இதற்கு ஆன்லைன் -ல்
  இலவசமாக பேச இணையதளம் இருக்கிறது கூகுள் உதவியுடன்
  தேடிப்பாருங்கள், விரைவில் நாம் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.

  ReplyDelete
 20. Please guide me the site by which i should purchase and how, i installed the software which is not appear n my gmail.

  ReplyDelete
 21. does it work in Windows utmate or 7

  ReplyDelete
 22. @ mujibur rahman
  நம் அலைபேசியில் கேட்கவும் பதில் கூறுகிறோம்.
  நன்றி

  ReplyDelete
 23. @ mujibur rahman
  எல்லா விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் துணை செய்யும்.
  நன்றி

  ReplyDelete

Post Top Ad