ஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, August 23, 2010

ஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம்

பார்கோட் வைத்து அதன் தகவலையும் நிறுவனத்தின் பெயரையும்
நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



நாம் வாங்கும் அனைத்துப் பொருட்களிலும் பார்கோட் என்ற
அடையாள கோடு என்று இருப்பது நமக்கு தெரியும். ஆனால்
இந்த பார்கோட் வைத்து எந்த நிறுவனத்தின் பொருள் என்று
எளிதாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்காலம்.


இணையதள முகவரி : http://www.onlinebarcodereader.com

இந்தத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் பார்கோட் படமான
jpg கோப்பை choose என்ற பொத்தானை அழுத்தி அப்லோட் செய்ய
வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் அப்லோட் செய்த
பார்கோட்-ன் நிறுவனத்தின் பெயரை துல்லியமாக எடுத்துக்
கொடுக்கும்.UPC-A, UPC-E, EAN-8, EAN-13, Code 39, Code 128
போன்ற அனைத்து வகையான பார்கோட்-ன் தகவல்களையும் நாம்
இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். எந்த வகையான ரெஸிஸ்டேரேசனும்
தேவையில்லை. உடனடியாகவும் எளிதாகவும் நாம் பார்கோட்-ஐ
படிக்கலாம். சில போலி நிறுவனங்களின் பொருட்களையும் நாம்
இந்த பார்கோட் வைத்து கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தத்
தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
ஞானம் இல்லாதவரிடம் பேசுவதை விட ஊமையாக
இருப்பதே நலம், தான் பேசுவதை மட்டும் வேத வாக்காக
எண்ணும் நபர்கள் தான் ஞானம் இல்லாதவர்கள்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மிகப்பெரிய தேசியக்கொடி உள்ள நாடு எது ?
2.முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது ?
3.எந்தப்பறவை பெரிய முட்டையிடும் ?
4.ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
5.அதிக நாள் உயிர் வாழும் மிருகம் எது ?
6.ஒரு செல் தாவரம் எது ?
7.சீன மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன ?
8.ஒளிபுகக்கூடிய ஒரே திரவம் எது ?
9.இருபதான் நூற்றாண்டின் முதல் தேதி என்ன ?
10.முதலாவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த
 வருடம் நடைபெற்றது ?

பதில்கள்:
1.டென்மார்க்,2.3 ஆண்டுகளும் 2 நாட்களும்,3.நெருப்புக்கோழி,
4.டயட்,5.ஆமை - 120 ஆண்டுகள்,6.கிளாமிடாமோனாஸ்,
7.1500 எழுத்துக்கள்,8.மைக்கா,9.1901 ஜனவரி 1 ,10.1930.



இன்று ஆகஸ்ட் 23 
பெயர் : வ. ராமசாமி,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 23, 1951

தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய
ஒரு முன்னோடி. வ. ராமசாமி ஒரு முற்போக்கு
சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திர
போராட்ட வீராகவும் விளங்கினார்.அய்யங்கார்கள்
பூணூல் அணிவது வழக்கம், இவர் அதைத் தவிர்த்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

  1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம்- இல் இணைக்கவும்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ விண்மணி

    ReplyDelete
  3. 8.ஒளிபுகக்கூடிய ஒரே திரவம் எது ? மைக்கா திடப்பொருள் தானே....???

    ReplyDelete
  4. @ parasuraman
    மைக்கா திரவ நிலையிலும் கிடைக்கிறது இதன்
    அறிவியல் பெயர் கருங்கரப்பன் வகை
    எனினும் முழுமையாகத் தெரியவில்லை , தெரிந்ததும் கண்டிப்பாக சொல்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
  5. enaku pdf file password podanum athuku solution solla mudiyuma

    ReplyDelete
  6. @ lakshmi
    Foxit Reader என்ற மென்பொருள் மூலம் எளிதாக கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம்
    நன்றி

    ReplyDelete
  7. அன்சாரிSeptember 5, 2010 at 2:34 AM

    புதிய இணயதளம் ஆரம்பிக்கும் வழிமுறை வேண்டும்

    ReplyDelete
  8. @ அன்சாரி
    விரைவில்.....

    ReplyDelete

Post Top Ad