நன்றாக இருக்கும் இதற்காக எந்த பணமும் செலவு செய்ய வேண்டாம்
எந்த வண்ணம் நம் வீட்டிற்கு நன்றாக இருக்கும் என்று ஆன்லைன்
மூலம் தெரிந்து கொள்ளலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
வீட்டிற்கு வண்ணம் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய கலைதான் என்றாலும்
வண்ணத்தை இவ்வளவு சுலமாக தேர்ந்தெடுக்கலாம் என்றால்
ஆச்சர்யமாகத் தான் இருக்கும் ஆனாலும் உண்மை தான் நம் வீட்டின்
புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன வண்ணம்
கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை ஆன்லைன் மூலமே
தேர்ந்தெடுக்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://colorjive.com/home.action
இந்தத்தளத்திற்கு சென்று நம் வண்ணம் பூச விரும்பும் நம் வீட்டின்
முகப்பு புகைப்படத்தையோ அல்லது வீட்டின் அறையோ புகைப்படம்
எடுத்து இந்ததளத்தில் தரவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டியது
தான். உடனடியாக நம் புகைப்படம் அடுத்தத்திரையில் வந்துவிடும்
இதில் நமக்கு பிடித்த அழகான வண்ணததை தேர்ந்தெடுத்து
பார்க்க வேண்டியது தான் எல்லாமே எளிமையாகத் தான்
இருக்கிறது. நமக்கு பிடித்த அழகான வண்ணத்தை அப்படியே
பிரிண்ட் ஸ்கிரின் செய்து சேமித்து அப்படியே வண்ணம் பூசுபவர்களிடம்
கொடுத்துவிட வேண்டியது எந்த வண்ணம் நன்றாக இருக்கும்
என்பதே முன்னமே தேர்ந்தெடுத்துவிடுவதால் நம் நேரமும்
பணமும் மிச்சம் கூடவே நமக்கு பிடித்த வண்ணத்தை
தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியும் இருக்கும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவரைப் பற்றிக் குறைகூறும் முன் நம்மை பற்றி ஒரு
போதும் பெருமையாக நினைக்காதீர்கள், அவர்கள் பக்கம் இருந்து
அடுத்த தரப்பு நியாயத்தையும் பாருங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?
2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?
3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்
மாவட்டம் எது ?
4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?
5.ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?
6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?
7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?
9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
10.எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?
பதில்கள்:
1.நர்மதை, 2.தமிழ்நாடு,3.கோயம்புத்தூர்,4.பஞ்சாப்,
5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,
8.மகாநதிச் சமவெளி,9.சென்னை,10.மும்பை
இன்று ஜூலை 31
பெயர் : செய்குத்தம்பி பாவலர்,
பிறந்தததேதி : ஜூலை 31, 1874
தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச்
சிறந்தோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்
பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய
சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக
நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து
விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான
செயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும்
கலையில் சிறந்து விளங்கியவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
அட... இண்டீரியர் சாப்ட்வேர் பத்தியும் எழுதியாச்சா... ஆல்ரவுண்டரா இருக்கீங்களே...
ReplyDeleteஅருமையான பகிர்விற்கு நன்றி
:)
This is very usefull to all peoples. Thank you verymuch for presenting a blog like this.
ReplyDelete@ கண்ணா
ReplyDeleteமிக்க நன்றி
@ Paraman. P
ReplyDeleteமிக்க நன்றி