அலைபேசியில் செய்தி வந்தால் ஒரு சத்தமும் அழைப்பு வந்தால்
வேறு சத்தமும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். சிலர்
அலைபேசியில் புதுமையான அழகான ஒலியை வைக்க
விரும்புவர்கள் இவர்களுக்கு உதவுவதற்க்காகத் தான் இந்தப்பதிவு.ஒரே அலைபேசியில் எத்தனை வகை ஒலிகளையும்
சத்தங்களையும் வைத்தாலும் மேலும் மேலும் என்ற எண்ணம்
மட்டும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது குருவி
சத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில்
இருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு
இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.audiencesounds.com

மற்றதளங்களை காட்டிலும் இந்தத்தளத்தில் ஒலியை சற்று
உடனடியாகவே கேட்கலாம் ஒரே நேரத்தில் பல ஒலியையும்
தேர்ந்தெடுத்து சொடுக்கி கேட்கலாம். எளிமையான முகப்பு பக்கம்
கொண்டு வலம் வருகிறது இந்தத்தளம்.  சத்தங்களை கேட்டால்
மட்டும் போதுமா அதை நம் அலைபேசியில் சேமிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் இதை அப்படியே தரவிரக்கிக்
கொள்ளலாம்.கண்டிப்பாக இந்த தளம் உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
தெரிந்த வித்தை கூட சில நேரங்களில் நமக்கு பயனளிப்பதில்லை
அதனால் சரியாக வித்தை செய்யாதவரை நாம் திட்டவும்
வேண்டாம் அவரைப்பற்றி பேசவும் வேண்டாம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்
மாநிலம் எது ?
3.நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?
4.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?
5.மிக முக்கியமான பணப்பயிர் எது ?
6.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
7.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?
8.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
9.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?
10.உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?

பதில்கள்:
1.கங்கை, 2.தமிழ்நாடு,3.சீஸ்மோகிராப்,4.தென் ஆப்பிரிக்கா,
5.பருத்தி, 6.கர்நாடகம், 7.பீகார்,8.மேற்கு வங்காளம்,
9.மகாராட்டிரம்,10.ஆல்டிமீட்டர்

இன்று ஜூலை 30  
பெயர் : சனத் ஜெயசூரியா,
பிறந்தததேதி : ஜூலை 30, 1969

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித்
துடுப்பாளர். இவர் மாத்தறை  சென் சவதியஸ்
கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட்
அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில்
ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற
ஒருநாட் போட்டியில் அறிமுகமானார்.இன்று பல
சாதனைகளுக்கு சொந்தகாரர்
.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

5 comments:

 1. 6-வது கேள்விக்கான பதிலில் / /6.கர்நாடகம் இராமச்சந்திரன்,// என்றிருக்கிறதே! அப்படி ஒரு பெயரா? துடுப்பாட்டம் என்பது என்ன விளையாட்டு ?

  ReplyDelete
 2. நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

  - ஜெகதீஸ்வரன்

  ReplyDelete
 3. என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
  செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
  எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.

  ReplyDelete
 4. @ shafa
  blogspot -லா அல்லது wordpress - லா எதில் வைத்து இருக்கிறீர்கள் ?
  நன்றி

  ReplyDelete

 
Top