ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, August 1, 2010

ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில்
எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில
நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில்
அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும்
Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip
என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை
இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக
கண்டுபிடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.yougetsignal.com/tools/visual-tracert/

இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும்
IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக
கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும்.
சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில்
முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம்
என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில்
சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக
அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும்
உடனடியாக இவர்கள் அந்த முகவரியை இங்கு கொடுத்து
இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.உதாரணமாக நாம் நம்
நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம்
சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியை ஆண்டவன் சரியான
சமயத்தில் தண்டிக்கிறான். அதனால் எந்த அரசியல்வாதியைப்
பற்றியும் நாம் குறை கூற வேண்டாம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
2.உலகிலுள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி எது ?
3.உலகிலுள்ள மிகப்பெரிய நகரம் எது ?
4.ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்ப்படுவது எது ?
5.புனித பூமி என்று அழைக்கப்படுவது எது ?
6.முத்துத் தீவு என்று அழைக்கப்படுவது எது ?
7.உலகிலுள்ள மிகப்பெரிய அரன்மனை எது ?
8.மிகப்பெரிய விலங்கு எது ?
9.உலகிலேயே மிகப்பெரிய கோவில் எது ?
10.சூரியன் மறையும் நாடு என்று எதற்குப் பெயர் ?

பதில்கள்:
1.மதுரை, 2.கெய்ரா பிரேசில்,3.ஷாங்காய்,4.பெல்ஜியம்,
5.பாலஸ்தீனம், 6.பஹரைன், 7.வாடிகன் அரண்மனை,
8.நீலத் திமிங்கலம்,9.அங்கோர்வாட் (கம்போடியா),10.நார்வே

இன்று ஆகஸ்ட் 1  
பெயர் : பால கங்காதர திலகர்,
மறைந்தததேதி : ஆகஸ்ட் 1 , 1920

ஒரு இந்தியத் தேசியவாதியும், சமூக
சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட
வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின்
முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும்
இவரே.இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி
கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது
பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும்
இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில்
நினைவுகூரப்படுகிறது. உங்களால் நம் தேசம் பெருமை
கொள்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில
நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில்
அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும்
Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip
என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை
இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக
கண்டுபிடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.yougetsignal.com/tools/visual-tracert/

இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும்
IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக
கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும்.
சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில்
முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம்
என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில்
சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக
அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும்
உடனடியாக இவர்கள் அந்த முகவரியை இங்கு கொடுத்து
இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.உதாரணமாக நாம் நம்
நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம்
சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3 comments:

  1. 11 இடங்களை காட்டுகிறது. 175.40.37.75. இதை முயற்சிக்க...

    ReplyDelete
  2. @ ஜெகதீஸ்வரன்
    ஐபி மாஸ்க் போட்டு உருவாக்கி இருக்கும் ஐபி முகவரியாக இருக்கலாம்,
    நன்றி

    ReplyDelete

Post Top Ad