மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, July 3, 2010

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்

பேட்டரி-ஐ ஜார்ச் செய்வதற்க்கு ஜார்ச்சரில் இப்படி தான் மாட்ட
வேண்டும் என்ற நிலையை மாற்றி எப்படி வேண்டுமானாலும்
பேட்டரியை மாட்டலாம் ஜார்ச் ஆகும் என்ற புதுவகை ஜார்ச்சரை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.





ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும்
மைக்ரோசாப்ட்-ன் புரட்சியாக எந்த துறையில் வேண்டுமானாலும்
புதுமையை படைக்க தயார் என்று அடுத்தக்கட்ட புதிய வகை
பேட்டரி ஜார்ச்சரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் நாம் இந்த ஜார்சரில் பேட்டரியை எந்த
கோணத்தில் போட்டாலும் ஜார்ச் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பேட்டரி ஜார்ச் போடவேண்டும் என்றால் + பார்த்து
போடு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இதில் இருக்கும் இரண்டு பக்கத்திலும் பாஸிட்டிவ் நெகட்டிவ்
இருக்கும் இதனால் எப்படி பேட்டரியை மாற்றி போட்டாலும்
ஜார்ச் ஆகும்.
வின்மணி சிந்தனை
சோதனை என்பது மனதை பக்குவப்படுத்த மட்டுமல்ல
மனிதன் செய்த பாவத்தை நீக்கவும் தான் என்பதை
உணர வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ?
4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?
5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ?
7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ?
8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன?
9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன?

பதில்கள்:
1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் ,
4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான்,
7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி,
10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.

இன்று ஜூலை 2
பெயர் : ஹேர்மன் ஹெசே,
பிறந்ததேதி : ஜூலை 2, 1962

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. Ilakkuvanar ThiruvalluvanJuly 3, 2010 at 4:40 PM

    charger எனபதைக் கிரந்த எழுத்தில் தவறுதலாகக் குறிப்பதை விடத் தமிழில் மின்னேற்றி எனக் குறிக்கலாம். அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தால் தமிழ்க் கலைச் சொற்களைக் குறிப்பிட்டு அனுப்புகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete
  2. விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
    im hv seen somewhre "yuri gagarin"

    ReplyDelete
  3. @ Ilakkuvanar Thiruvalluvan
    மிக்க நன்றி ஐயா ,
    கண்டிப்பாக அனுப்பி வைக்கிறோம்.

    ReplyDelete
  4. @ faaique Najeeb
    சரிதான் நண்பரே...

    ReplyDelete

Post Top Ad