பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, July 4, 2010

பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்

பிடிஎப் கோப்புகளில் சிலவற்றை நாம் கடவுச்சொல் கொடுத்து
வைத்திருப்போம் சில நேரங்களில் கடவுச்சொல் மறந்துவிடும்
ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் ஆன்லைன் மூலம் நம்
பிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கலாம் எப்படி என்பதைப்
பற்றிதான் இந்த பதிவு.



ஆன்லைன் -ல் இபுத்தகமாக அதிகம் வலம் வருவது பிடிஎப் கோப்புகள்
தான் இந்த பிடிஎப் கோப்புகளை சில சமயம் திறக்க முயற்ச்சி செய்யும்
போது கடவுச்சொல் (Password) கேட்கும் அந்த மாதிரி பிடிஎப்
கோப்புகளின் கடவுச்சொல் நமக்கு தெரியவில்லை என்றாலும் எளிதாக
எந்த மென்பொருளின் துனையும் இல்லாமல் ஆன்லைன் மூலம்
எளிதாக அந்த கடவுச்சொல்லை நீக்கி நம் பிடிஎப் கோப்பை படிக்கலாம்
இதற்க்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.unlock-pdf.com

[caption id="attachment_2583" align="aligncenter" width="425" caption="படம் 1"][/caption]

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
Choose என்ற பொத்தனை அழுத்தி நம் பிடிஎப் கோப்பை
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து Unlock File என்ற
பொத்தானை அழுத்துவதன் மூலம் நம் பிடிஎப் கோப்பின்
கட்வுச்சொல்லை எளிதாக நீக்கலாம். எல்லா இடங்களுக்கும்
பிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கும் மென்பொருளை
கொண்டு செல்ல தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக
பிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கலாம் கண்டிப்பாக
இந்த பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
உண்மைக்காக கடைசிவரை நல்லவர்களுக்கு உதவி
செய்யும் காவலர்கள் கடவுளின் அன்பை கண்டிப்பாக
பெறுவார்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ?
2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?
3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது?
4.ஆணினமே இல்லாத உயிரினம் எது ?
5.நாய் வளர்ப்பது குற்றமாகும் என்று எண்ணும் நாடு எது ?
6.குரங்குகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் நாடு எது ?
7.மேற்கு ஆசியாவின் மிகப் பழைய துறைமுகம் எது ?
8.புத்தாண்டு தினத்தன்று கொரியர்கள் தவறாமல் செய்யும்
பழக்கம் என்ன ?
9.பசுவுக்கு கோவிலை கட்டியுள்ள நாடு எது ?
10.காற்றாலைகளை அறிமுகம் செய்த நாடு எது ?

பதில்கள்:
1.சர்.சி.வி.ராமன், 2.நரேந்திரநாத் தத்,3.Coroline Institute
of Stockholm , 4.நெமிடோபோரஸ்-பல்லி இனம்,5.ஐஸ்லாந்து,
6.தாய்லாந்து, 7.பை பிளாஸ் துறைமுகம், 8.பட்டம் விடுவது,
9.ஜப்பான், 10.இஸ்லாமிய நாடுகள்.

இன்று ஜூலை 3 
பெயர் : செல்லப்பன் ராமநாதன்,
பிறந்ததேதி : ஜூலை 3, 1924

எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும்
செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரின்
தற்போதைய தலைவர்  ஆவார். இவர்
செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி
வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005
அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. Very useful information....thank u once again.....

    ReplyDelete
  2. @ Tamilblok
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. please avoid double double kkaka, muyarchi like this words.

    ReplyDelete
  4. புரியல நண்பரே.....

    ReplyDelete
  5. Dear sir,

    After Un lock the password it ll again asking password to open? what shall i do!

    ReplyDelete
  6. @ Raja
    மறுபடியும் முயற்ச்சித்துப்பாருங்கள். கண்டிப்பாக வரும்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad