Adsense

யூடியுப்-ல் கடந்த சில மாதங்களாக கணினி கொள்ளையர்களால்
பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது மறுபடியும்
கணினி கொள்ளையர்கள் யூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டியுள்ளனர்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.புரோகிராம் எழுதுபவரை விட அதிகக் கணினி ஞானம் உள்ளவர்கள்
தான் ஹேக்கர்கள் என்று சொல்லக்கூடிய கணினி கொள்ளையர்கள்
இவர்களால் கணினியில் செய்ய முடியாதது என்று சொல்ல எதுவும்
இல்லை. அந்த அளவிற்க்கு கணினியிடம் நட்பாக இருக்கும் இவர்கள்
பல இணையதளங்களை படாதபாடுபடுத்தி ஆட்டம் காண வைத்தது
அனைவருக்கும் தெரியும் சமீபத்தில் யூடியுப்-ல் செக்யூரிட்டி அதிகம்
அப்படி என்று செய்தி வந்தது உடனடியாக யூடியுப்-ஐ தாக்கி  தங்கள்
வசம் கொண்டுவந்தனர் அடுத்து சில மாத ஒய்வுக்குபின் இப்போது
மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். யூடியுப்-ல் தெரியும்
ஒரு விடியோவில் தங்கள் கைவண்ணத்தை காட்டி வீடியோவை
நேரடியாக தாக்கி மாற்றியுள்ளனர். உடனடியாக யூடியுப் தொழில்நுட்ப
வல்லுனர்கள் இந்த பிரச்சினையை சரி செய்ய முற்பட்டு மேலும்
தாக்காத வண்ணம் காப்பாற்றி உள்ளனர். இப்போது இந்த வீடியோ
சரி செய்யப்பட்டுவிட்டது.
http://www.youtube.com/watch?v=iOvNQ7O8yMk&NR=1

கிராஸ் சைட் ஸ்கிரிப்ட் என்று சொல்லக்கூடிய முறையை பயன்படுத்தி
தான் இவர்கள் யூடியுப் -ஐ தாக்கியுள்ளனர் என்பது நமக்கு தெளிவாக
தெரிகிறது. கிராஸ் சைட் ஸ்கிரிப்ட் பற்றியும் இதிலிருந்து எளிதாக
நம் தளத்தை பாதுகாக்க சில வழிகள் இருந்தும் இதை ஏன் யூடியுப்-ல்
இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் முயற்சிக்க வில்லை என்பது
ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சாதாரன ஒரு சின்ன பிரச்சினை என்று
இதை விட்டுவிடக்கூடாது.இதேப்போல் ஸ்கிரிப்ட்-ஐ வைத்து எந்த
இணையதளத்தையும் முடக்கலாம் என்பதால் உடனடியாக இந்த
ஸ்கிரிப்ட-ஐ தடுக்கும் வெப் செக்யூரிட்டி அப்ளிகேசனை
உருவாக்கினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். காலமும்
நேரமும் கிடைத்தால் கிராஸ் சைட் ஸ்கிரிப்ட் பற்றி ஒரு விரிவான
பதிவு இடுகிறோம். கூடவே இன்னொன்றும் யோசிக்க வேண்டி
இருக்கிறது ஆர்வக்கோளாறினால் நாம் இடும் பதிவால் நிறைய
கணினி கொள்ளையர்கள் உருவாகிவிடக்கூடாதே என்ற
எண்ணமும் இருக்கிறது. கூடுமானவரை இலை மறைக் காயாக
கிராஸ் சைட் ஸ்கிரிப்ட் பற்றி நமக்கு தெரிந்ததை சொல்லிக்
கொடுக்க முயற்சிக்கிறோம்.
வின்மணி சிந்தனை
உண்மைக்கு புறம்பாக அலுவலகத்தில் வேலை
செய்யக்கூடாது. ஒரு நாள் மட்டும் என்று நாம்
எண்ணினால் கூட நாளை நம்மை காப்பாற்ற
யாரும் வர மாட்டார்கள்
.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?
2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை
குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?
3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு
 பங்கு விளையும் இடம் எது ?
4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?
5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?
6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால்
உருவாக்கப்பட்டிருக்கிறது ?  
7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?
8.7.51 ச.கி.மீ பரப்பளவும்  20,000 மக்களையும் கொண்ட
 நாடு எது?
9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி
சாலையின் பெயர் என்ன  ?
10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு
ஆரம்பிக்கப்பட்டது?

பதில்கள்:
1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,
3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,
6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,
9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.

இன்று ஜூலை 4 
பெயர் : சுவாமி விவேகானந்தர்,
மறைந்ததேதி : ஜூலை 4 , 1902
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,
நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து
காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

4 comments:

 1. நல்ல பதிவு,

  வாழ்த்துக்கள்.

  நீங்கள் கொடுத்துள்ள யூடியுப் வீடியோ லீங்கில் ஒரு space உள்ளதால், மாற்றி அமைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  தொடரட்டும் உங்கள் சேவை..

  ReplyDelete
 2. @ Tamil Blogger
  நண்பருக்கு ,
  நேற்று மதியம் 12 மணி வரை இந்தப்பிரச்சினை சரி செய்யப்படவில்லை அதானால் தான்
  லிங்கில் ஒரு இடைவெளி விட்டு கொடுத்தோம். இப்போது சொடுக்கினால் போதும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. kanini kollaiyar padri thodarnthu ezhuthungal. therinthu kolkirom

  ReplyDelete
 4. @ meeraprian
  மிக்க நன்றி , கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.

  ReplyDelete

 
Top