Winmani: மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Showing posts with label மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல். Show all posts
Showing posts with label மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல். Show all posts

Tuesday, September 14, 2010

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா

4:11 PM 0
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் மட்டும் அல்லாமல் வெப்கேமிரா
உலகிலும் இனி மைக்ரோசாப்ட் பெயர் நிலைத்து இருப்பதற்கான
அடுத்த உற்பத்தி பொருள் தயார். மைக்ரோசாப்ட்-ன் ஹை டெபினிசன்
(HD) கூடிய துல்லியமான புதிய வெப் கேமிராவைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.



மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் எல்லா மென்பொருள் மற்றும்
வன்பொருள்கள்  அனைத்தும் பயனாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்
வண்ணமும், எளிதாக பயன்படுத்தும்படியும் இருக்கும் இதுதான்
அதன் சிறப்பு. அந்த வகையில் அடுத்ததாக 1080 பிக்சல் கொண்ட
ஹை டெபினிசன் சென்சாருடன் கூடிய நவீன வெப்கேமிராவை
அறிமுகப்படுத இருக்கிறது. வெப்கேமிரா 360 டிகிரியிலும் சுழலும்
வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெப்கேமிராவின்
சிறப்பம்சமாக Auto Focus, True color மற்றும் Clear Frame ஆகிய
வசதிகள் உள்ளது. இந்த அத்தனை வசதிகளையும் ஒரே
வெப்கேமிராவில் கொடுப்பது இதுவே முதல் முறை. விண்டோஸ்
லைவ் மெசேஞ்சர் 2011 பீட்டா வெர்சனில் வீடியோ காலிங் 16:9
என்ற பார்மட்-ல் பயன்படுத்த முடியும். இந்த வெப்கேமிராவில் விலை
$99.95 அமெரிக்க டாலர். இந்த மாதத்தின் இறுதியில் விற்பனைக்கு
வரும் என்று தெரிகிறது.
வின்மணி சிந்தனை
வயதை வைத்து மனிதனின் பெருமையை கூறக்கூடாது.
செய்த செயலை வைத்தே மனிதனின் பெருமையை
கூற வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார் ?
2.15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை நெருங்கி வரும்
 கிரகம் எது ?
3.மிக்கிமவுஸ் கார்டூன் படத்தை தயாரித்தவர் யார் ?
4.உலக அறிவொளி இயக்கத் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
5.சர்வதேசக் காலண்டர் முறைக்கு என்ன பெயர் ?
6.தண்ணீரில் மிதக்கும் கல்லின் பெயர் என்ன ?
7.நேபாள நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
8.ரோம் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ?
9.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ?
10.இங்குலிகம் என்பது என்ன தெரியுமா ?

பதில்கள்:
1.தொல்காப்பியர்,2.செவ்வாய்,3.வால்ட் டிஸ்னி,
4.செப்டம்பர் 8, 5. கிரிகோரியன் காலண்டர், 6.புமிஸ்,
7.பஞ்சாயத்து,8.டைபர்,9.புதுடெல்லி,10.தாதுப்பொருள்.

இன்று செப்டம்பர் 14 
பெயர் : நாஸ்,
பிறந்த தேதி : செப்டம்பர் 14, 1973

புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர்.
1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக்
(Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப்
இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த
ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று
கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட்
வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Read More

Saturday, July 3, 2010

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்

12:11 PM 4
பேட்டரி-ஐ ஜார்ச் செய்வதற்க்கு ஜார்ச்சரில் இப்படி தான் மாட்ட
வேண்டும் என்ற நிலையை மாற்றி எப்படி வேண்டுமானாலும்
பேட்டரியை மாட்டலாம் ஜார்ச் ஆகும் என்ற புதுவகை ஜார்ச்சரை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.





ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும்
மைக்ரோசாப்ட்-ன் புரட்சியாக எந்த துறையில் வேண்டுமானாலும்
புதுமையை படைக்க தயார் என்று அடுத்தக்கட்ட புதிய வகை
பேட்டரி ஜார்ச்சரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் நாம் இந்த ஜார்சரில் பேட்டரியை எந்த
கோணத்தில் போட்டாலும் ஜார்ச் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பேட்டரி ஜார்ச் போடவேண்டும் என்றால் + பார்த்து
போடு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இதில் இருக்கும் இரண்டு பக்கத்திலும் பாஸிட்டிவ் நெகட்டிவ்
இருக்கும் இதனால் எப்படி பேட்டரியை மாற்றி போட்டாலும்
ஜார்ச் ஆகும்.
வின்மணி சிந்தனை
சோதனை என்பது மனதை பக்குவப்படுத்த மட்டுமல்ல
மனிதன் செய்த பாவத்தை நீக்கவும் தான் என்பதை
உணர வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ?
4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?
5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ?
7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ?
8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன?
9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன?

பதில்கள்:
1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் ,
4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான்,
7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி,
10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.

இன்று ஜூலை 2
பெயர் : ஹேர்மன் ஹெசே,
பிறந்ததேதி : ஜூலை 2, 1962

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Read More

Sunday, April 11, 2010

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்

3:53 PM 4
மடிக்கணினிகளை காணாமல் செய்வதற்க்காக தற்போது ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபேட் மற்றும் கூகுள் நெக்சஸ் முழு முயற்ச்சியாக
களத்தில் இறங்கியுள்ளனர். இனி நாமும் மொபைல் துறையில் கால்
வைத்துதான் ஆக வேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாப்ட்
நிறுவனமும் சோசியல் நெட்வோர்க்குக்காக சிறப்பான மொபைல்
ஒன்றை நாளை ஏப்ரல் 12 திங்கள் கிழமை அறிமுகப்படுத்துகிறது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.



மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த பிராஜெக்ட்-ன்
பெயர் ” பிங் “ தற்போது ஆப்பிள் ஐபோன் ஆண்டிராய்டு அப்ளிகேசன்
துனையுடன் தான் இயகுகிறது ஆனால் மைக்ரோசாப்ட் வெளியீடும்
இந்த பிங் போனில் உள்ள எல்லாம் மைக்ரோசாப்ட்-ன் அடுத்தக்கட்ட
அப்பளிகேசன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனபது மட்டும் இப்போது
வெளியிடப்பட்ட தகவல். இந்த போன் ஜப்பான் நிறுவனத்தால்
உருவாக்கப்படுகிறது.  பேஸ்புக் ,டிவிட்டர் , கூகுள் பஸ் மற்றும் பல
சோசியல் நெட்வோர்க்கை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
” விண்டோஸ் போன் 7 ”  என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இதனுடன்
சில மென்பொருள்களும் இணைந்து வரும் என்பது கூடுதல் தகவல்
எல்லாம் நாளை தெரிந்துவிடும்.
வின்மணி இன்றைய சிந்தனை
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து
காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி
செய்பவன் அவன் மட்டும் தான். அதே போல நண்பர்களிடம்
நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு எது ?
2. கனடாவின் பழைய பெயர் என்ன ?
3. உடலில் இரத்த அழுத்தம் பாயாத பகுதி எது ?
4. தங்கத்தின் அறிவியல் பெயர் என்ன ?
5. சோழ வம்சம் யாரால் அழைக்கப்பட்டது ?
6.விமானங்களின் சக்கரங்களில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது?
7.உலகின் முதல் குடியரசு நாடு எது ?
8.நமது உடலில் எவ்வளவு தண்ணிர் உள்ளது ?
9.ஆசியாவின் மிக்பெரிய கோபுரம் எது ?
10. போஸ்ட்கார்டை முதலில் அறிமுகபடுத்திய நாடு எது ?

பதில்கள்:
1. பிரான்ஸ்,2.கோல்டு கோஸ்ட்,3.கருவிழி,
4.அயூரியம்,5.விஜயாலய சோழர்,6.நைட்ரஜன்
7.ஸ்பார்ட்டா,8.71 விழுக்காடு,9.ஸ்ரீரங்கம் ஆலயகோபுரம்
10.ஆஸ்திரேலியா

இன்று ஏப்ரல் 11 
பெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995
இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார்.
1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது
கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில்
(historicist style) வடிவமைத்தார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச்
சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும்
கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism)
ஆதரவாளராக இருந்தார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Read More

Post Top Ad