பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம் உருவாக்க எந்த கோடிங் அனுபவமும் தேவையில்லை. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, July 28, 2010

பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம் உருவாக்க எந்த கோடிங் அனுபவமும் தேவையில்லை.

சமூக வலைதளங்களில் அதிகமான மக்களின் எண்ணிக்கையில்
வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம்
எந்த கோடிங் அறிவும் இல்லாமல் அழகாக உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



பேஸ்புக் பயனாளர்கள் தங்களுக்கென்று தனிப்பக்கம் உருவாக்கலாம் ,
தங்களுக்கு பிடித்த படங்களை சேர்க்கலாம் வலதுபக்கம், இடது பக்கம்
மேல் கீழ் என எந்தப்பக்கத்தில் வேண்டுமானாலும் படங்களையும்
அழகான எழுத்துக்களையும் சேர்க்கலாம் எல்லாம் இலவசமாக இந்த
சேவையை வழங்க ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.pagemodo.com

இந்தத் தளத்திற்கு சென்று நம் பேஸ்புக்-ன் கணக்கை திறந்து
வைத்துக்கொண்டு நாம் பேஸ்புக்-ல் நமது பக்கத்தை வடிவமைக்கலாம்
பேஸ்புக்-ல் நமது பக்கத்தின் Background color மற்றும் styles
போன்ற அத்தனையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். 2 வேறுபட்ட
பக்கத்தின் layout இருக்கிறது இதில் எதுவேண்டுமோ அதைக்
கூட நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் பேஸ்புக்-ன்
அழகான பக்கம் உருவாக்க நமக்கு எந்த கோடிங் அறிவும்
தேவையில்லை உடனடியாக நாம் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம்.
வின்மணி சிந்தனை
எல்லா மனிதருக்கும் இரண்டு குணம் இருக்கிறது, இதில்
நாம் அன்பான குணத்தை மட்டுமே எல்லோருக்கும்
காட்ட வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் ?
2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைச்
சேர்ந்தவர்?
3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது ?
5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது ?
6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது?
7.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது?
9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச
வயது என்ன ?
10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற
முதல் இந்தியர் யார் ?

பதில்கள்:
1.ஜி.டி.நாயுடு, 2.ஆந்திரா,3.சுவாமி விவேகானந்தர்,
4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா,
6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800,
9.12 வயது,10.கீத் சேத்தி

இன்று ஜூலை 28 
பெயர் : பிரான்ஸ் பேர்டினண்ட்,
பிறந்ததேதி : ஜூலை 28, 1914

ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும்,
ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின்
இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல்
இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின்
பட்டத்துக்கு உரியவரும் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

Post Top Ad