செய்தியைப் பற்றித் தான் இந்தப்பதிவு.

சமூகவலைதளங்களில் தனி இடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும்
டிவிட்டரின் மிகப் பழமையான பயனாளர் தான் ஐவி பீன் இங்கிலாந்தில்
பிரெட்போர்ட் பகுதியில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி
டிவிட்டர் செய்தி நம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.
தினமும் தனது அன்றாட வேலைகளை டிவிட்டரில் பதிவதும் தான்
செல்லவிருக்கும் நிகழ்ச்சி என அத்தனையும் டிவிட்டரில் பகிர்ந்து
கொள்வது இந்த பாட்டியின் சிறப்பு.102 வயதில் தான் இந்த பாட்டி
டிவிட்டரில் இணைந்திருக்கிறார் 58,986 பேர்கள் நேற்று வரை
இவரை பின் தொடர்ந்துள்ளனர், இதுவரை 1349 செய்திகளை
டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே எனக்கு
உடல் நிலை சரியில்லை என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு சரியாக 8 மணி நேரத்திற்கு முன்பு அவர் அனுப்பிய
செய்தியில் “ இன்று காலை 12.08 மணிக்கு நான் அமைதியாக இந்த
உலகத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” இதுவரை என்னை பின்
தொடர்ந்த அத்தனை அன்பான நண்பர்களிடம் இருந்து விடை
பெறுகிறேன். இந்த செய்தியை கேட்ட அவரது அத்தனை நண்பர்களும்
ஐவீ பீன்- க்காக தங்களது டிவிட்டரில் அஞ்சலியை செலுத்தி
வருகின்றனர். சமூக வலைதளங்களில் அத்தனை முக்கியமான
செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு இந்த பாட்டி
ஒரு முன் உதாரணம்.
வின்மணி சிந்தனை
அன்பான மனிதன் இந்த உலகை விட்டுச் சென்ற பின்னும்
புகழுடன் வாழ்வான் என்பது சத்தியமான உண்மை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது?
2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது ?
4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன ?
5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது?
7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது?
8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது?
10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில்
சேர்க்கப்பட்டது ?
பதில்கள்:
1.நெய்வேலி, 2.வேடந்தாங்கல்,3.புதுடெல்லி,4.ஜெயா,
5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு,
7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு,
10.1951 ஆம் ஆண்டு
இன்று ஜூலை 27
பெயர் : தேசிக விநாயகம் பிள்ளை,
பிறந்ததேதி : ஜூலை 27, 1876
20 நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர்.
பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள்,
வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப்
பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல்
போராட்டகவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள்,
வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள்,
பல்சுவைப் பாக்கள் என பலவற்றை இயற்றியவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

பற்பல உபயோககரமான தகவல்களைக் கொடுத்துவருகின்ற வின்மணிக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் இந்த ஆச்சரியகரமான, சிறந்த பதிவுகளை.
ReplyDeleteஐவீ பீன் அம்மையாரின் ஆத்மா சாந்திக்காக நாம்- இணைய பயனீட்டாளர்கள் அனைவரும் பிரார்த்திப்போம். இதயத்தை நெகிழ வைக்கும் இப்பதிவை வழங்கி நீங்களும் புனிதம் சேர்த்துக் கொண்டீர்கள். வின்மணி! வாழக ! வளர்க !
ReplyDeletesurya kannan valai poo kidaithuvittadhu
ReplyDelete@ inamul hasan
ReplyDeleteமிக்க நன்றி
@ தணிகாசலம்
ReplyDeleteமிக்க நன்றி
@ K G Gouthaman
ReplyDeleteமிக்க நன்றி
இணையம் என்றாலே விபரீதம் என்று மக்களை பயம் கொள்ளச் செய்யும் நாளிதல்களும், பிற ஊடகங்களும் பாட்டியை பார்த்தாவது திருந்தட்டும்.
ReplyDelete@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி