Adsense

வயர்களை இணைப்பதில் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பமாகவும்,
முடிச்சுகளுடன் இருக்கும் இந்த பெரும் பிரச்சினைக்கு எளிமையாக
புதுமையான முறையில் தற்போது தீர்வு கண்டிருக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.கணினி அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு அதிகமாக வயர்களைப்
பயன்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கு சில
நேரங்களில் தலைசுற்றும் அளவிற்கு  வயர்களின் முடிச்சுகள்
பார்க்கவே முடியாதபடி இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு எளிய
முறையில் புதுமையாக தீர்வு வந்துள்ளது.வயர்களை மொத்தமாக
இணைக்க நாம் பயன்படுத்துவது போல் அதே இணைப்பில்
இப்போது இலை வடிவம் மற்றும் சிறு பொம்மை என சற்றே
வித்தியாசமாக மாற்றி உள்ளனர்.  ஐபாட் வயர் முதல் யூஎஸ்பி
வயர் வரை அனைத்தையும் பல்வேறு வடிவங்களில் எப்படி
எல்லாம் வயரின் முடிச்சுகளை இணைக்கலாம் என்று பார்க்கும்
போது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.வயர்களை இணைக்கும்
பல்வேறு வடிவங்களின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
ஒருவருக்கு மட்டும் தான் தீங்கு இழைக்கிறோம் என்று நாம்
செய்யும் காரியங்கள் பல நேரங்களில் அனேக மக்களைப்
பாதிக்கிறது அதனால் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது
தொடங்கப்பட்டது ?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ?
6.வருமான வரி செலுத்தாத நாடு எது ?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்
பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?

பதில்கள்:
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா,
4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத்,
7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து

இன்று ஜூலை 26  
பெயர் : மு. கு. ஜகந்நாதராஜா,
பிறந்ததேதி : ஜூலை 26, 1933

ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு,
மலையாளம்,கன்னடம்,சமஸ்கிருதம்,பாலி,
ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய
மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண
தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத
( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு
தமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த
மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது
பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு
விருது பெற்ற நூல்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

2 comments:

  1. நல்ல தகவல் வின்மணி. அந்த ஐட்டங்கள் விற்பனைக்கு வந்துவிட்டால் எல்லாருக்கும் சௌகரியமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  2. @ தணிகாசலம்
    மிக்க நன்றி

    ReplyDelete

 
Top