நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, July 23, 2010

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

அமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை
தொலைபேசி மூலம் இலவசமாக சொல்லலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



பிறந்த நாள் வாழ்த்து என்றால் உடனடியாக தொலைக்காட்சி
சேனனிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இமெயில் மூலமாகவும்
வாழ்த்தியதைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி தொலைபேசி
வாயிலாக நாம் பிறந்த நாள் வாழ்த்துக்க்ளை சொல்லலாம்
இலவசமாக எந்த கட்டணமும் இலவசமாகவே இந்த சேவையை
செய்து வருகிறது ஒரு இணையதளம்.

இணையதள முகவரி : http://www.birthdaydialer.com



அமெரிக்காவில் வாழும் நண்பர்களுக்கு மட்டும் நாம் அவருடைய
தொலைபேசிக்கே வாழ்த்துக்களை கூறலாம், நாம் என்ன வாழ்த்துச்
செய்தி கூறவேண்டும் என்பதை இங்கு இருக்கும் வாழ்த்து செய்தியில்
இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து வரும் திரையில்
நாம் யாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப வேண்டுமோ அவரது
தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும் நாம் தேர்ந்த்டுத்த
வாழ்த்துச் செய்தி நண்பருக்கு உடனடியாக அனுப்பபட்டுவிடும்.
நம் இமெயில் முகவரியை கொடுத்தால் வாழ்த்து செய்தியின்
ஆடியோ நம் இமெயிலுக்கும் அனுப்பப்படும்
வின்மணி சிந்தனை
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பு கூட நம்
வாழ்வில் பல வெற்றிகளை கொடுக்கும் ஒரு படி தான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் ?
2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது?
3.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார் ?
4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் ?
5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது ?
6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் ?
7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் ?
8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும்
நோய் எது?
9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள
 நாடு எது?
10.பூப்பள்ளதாக்கு என்னுமிடம் எங்குள்ளது ?

பதில்கள்:
1.தேனீ, 2.சிசிலி,3.அலெக்சாண்டர் பார்க்ஸ்,
4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,
5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,
7.யூதர்கள்,8.மலேரியா,9.சீனா,10.கார்வால்( உ.பி).

இன்று ஜூலை 22  
பெயர் : இரண்டாம் நெப்போலியன்,
மறைந்ததேதி : ஜூலை 22, 1832

இரண்டாம் நெப்போலியன் என்பவன் முதலாம்
நெப்போலியனான நெப்போலியனான
பொனபார்ட்டின் மகன் ஆவான்.இவன் ஜூன் 22,
1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7
வரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன். குறுகிய காலம்
பேரரசனாக இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

  1. இப்படிக்கூட இணையத்தளம் இருக்கிறதா
    அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  2. @ Elamurugan
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்து, அமெரிக்காவிற்கு மட்டும்தானா ? இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு முடியாதா?

    ReplyDelete
  4. @ தணிகாசலம்
    இப்போதைக்கு அனுப்ப முடியாது,
    நன்றி

    ReplyDelete
  5. How to set tamil font in 6230inokia mobile

    ReplyDelete
  6. @ Gani
    நேரம் கிடைத்தால் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.
    நன்றி

    ReplyDelete
  7. ஆனால் தற்பொழுது இதனை கட்டனமயமாக்கி உள்ளனர்.

    ReplyDelete
  8. enathu pathivinai TAMIL~il elutha enna vali ?

    ReplyDelete

Post Top Ad