ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, July 24, 2010

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து
விளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்
வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்
எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.
இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.







எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.
வின்மணி சிந்தனை
உங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு
அளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில்
இல்லை ?
2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ?
3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட
அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ?
5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ?
6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ?
7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்?
8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ?
9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ?
10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்
யார் ?

பதில்கள்:
1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து,
4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,
6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,
9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா

இன்று ஜூலை 23  
பெயர் : பெ. வரதராஜுலு நாயுடு,
மறைந்ததேதி : ஜூலை 23, 1957

இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப்
போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும்,
பத்திரிக்கையாளருமான இவர் சென்னை
மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

14 comments:

  1. கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
    அருமையான தகவலுக்கு நன்றி

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம்
    கோடி நன்றிகள்

    ReplyDelete
  4. @ மஞ்சூர் ராசா
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ s.n.ganapathi
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. i tried in windows 07. not working.. i gave these two ip 208.67.222.123
    208.67.220.123

    ReplyDelete
  7. ஆஹா! வின்மணி, உங்களின் இன்றைய சிந்தனை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டிய ஒன்று. இறைவன் உங்களுக்கு அளப்பரிய சிந்தனை ஆற்றலை வழங்கவும் நீங்கள் இன்னும் ஈடுஇணையற்ற சிந்தனைகளை வெளியிடவும் அருள வேண்டும்.

    ReplyDelete
  8. superb it cant display adult website ..

    but it allow tamil adult website.. plz rectify it

    ReplyDelete
  9. @ தணிகாசலம்
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. விலை மதிப்பற்ற இத்தகவலை தந்தமைக்கு இறைவன் உங்களுக்கு நல்லறுள் புரிய இரைஞ்சுகிறேன். அதனோடு அந்த வீடியோவை எந்த லிங்கில் பார்க்க வேண்டும் என வழமையாக லிங்கையும் சேர்த்து தரும் நீங்கள் இதற்கு லிங்க் தர வில்லையே! அந்த வீடியோவை எங்கு பார்க்கலாம்?
    நன்றி

    ReplyDelete
  11. @ அன்ஸார்
    http://www.opendns.com
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. useful links. i like it

    ReplyDelete
  13. @ selvam
    மிக்க நன்றி

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல். நல்லதொரு சமூகப்பணி. நன்றி. வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.

    ReplyDelete

Post Top Ad