மிகப்பெரிய நாடுகளின் மொழியான சீன மொழி மற்றும் ஜப்பானிய
மொழிகளை இனி ஆன்லைன் மூலம் எழுதவும் பேசவும் செய்யலாம்
இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
எல்லா நாட்டு மொழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்
என்ற ஆசை உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும், காலத்தின் கட்டாயத்தில் இன்று பல மொழிகளை கற்க
வேண்டி இருக்கிறது அந்த வகையில் எளிதாக நாம் சீன மற்றும்
ஜப்பான் மொழிகளை ஆன்லைன் மூலம் கற்ப்பதற்கு ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.skritter.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் அவர்கள் காட்டும் எழுத்துகளை
பெயிண்ட்-ல் வரைவது போல வரையவேண்டும் அவ்வளவு தான்
அடுத்து நாம் வரைந்திருக்கும் எழுத்தை எப்படி சொல்லவேண்டும்
என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர். வித்தியாசமான முறையில்
சிறு சிறு கட்டமாக குறுக்கும் நெடுக்கும் பிரித்து எழுதுவதால்
பிழை வராமல் இருக்கும் என்று இவர்கள் இந்த முறையைப்
பின்பற்றுகின்றனர்.
வின்மணி சிந்தனை
கடவுளிடம் அன்பை காட்டுங்கள் , மனம் விட்டு பேசுங்கள்
நாளை செயல் நல்லவிதமாக நடக்க அவன் துனை செய்வான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பரிணாம சித்தாந்தத்தைப் பற்றிக் கூறியவர் ?
2.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
3.இந்தியாவில் நேவல் அகாடமி எங்கு அமைந்துள்ளது ?
4.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
5.தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
6.இந்தியாவில் கோசி நதி ஒடும் மாநிலம் எது ?
7.சார்க் 10- வது மாநாடு எங்கு நடந்தது ?
8.1998-ஆம் ஆண்டு காந்தி சமாதான விருது யாருக்கு
வழங்கப்பட்டது ?
9.ஆங்கிலேயர், புனித ஜார்ச் கோட்டையை கட்டிய
மாநிலம் எது ?
10.நாய்க்கடி மருந்துஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
பதில்கள்:
1.சார்லஸ் டார்வின், 2.ஜோசப் பெஸ்கி,3.கொச்சின்,
4.சென்னை,5.பானாஜி (கோவா),6.பீகார்,7.கொழும்பு,
8.இராமகிருஷ்னா மிஷின்,9.தமிழ்நாடு,10.குன்னூர்.
இன்று ஜூலை 21
பெயர் : சிவாஜி கணேசன்,
மறைந்ததேதி : ஜூலை 21, 2001
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற
திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
அறிமுகமானார்.நடிகர் திலகம் என்ற பெருமையை
பெற்றவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Very nice and useful post. Thank you very much to introduce the site.
ReplyDeleteஎன்னுடன் சீனா மக்கள் வேலை செய்கிறார்கள்..எனக்கு இது உண்மையிலேயே பயனுள்ள செய்திதான்...கொஞ்சமாவது கற்று கொண்டு அசத்துகிறேன்
ReplyDeleteமிக்க நன்றி
@ Elamurugan
ReplyDeleteமிக்க நன்றி
பி எஸ் என் எல் பிராண்ட் பேண்ட் உள்ளது. இதை எவ்வாறு இணைப்பது? பகிர்வது?
ReplyDelete@ அசோக்
ReplyDeleteதங்களின் கேள்வி புரியவில்லை... ?
மிக்க நன்றி