குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, July 14, 2010

குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை வளர்ப்பது புத்தகங்கள் தான்
தேர்ந்தெடுத்த மிகவும் பயனுள்ள குழந்தைகளின் அறிவை வளர்க்கக்
கூடிய பல புத்தகங்களை ஆடியோ விடியோவுடன் ஒரே இடத்தில்
இருந்துகொண்டு பார்க்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.



எத்தனையோ தளங்கள் சென்று தேடினாலும் குழந்தைகளுக்காக
நாம் தேடும் புத்தகம் சில நேரங்களில் கிடைப்பதில்லை ஆனால்
குழந்தைகளுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு
இணையதளம் ஒன்று உள்ளது.இந்த தளத்தில் குழந்தைகளின்
அறிவையும் நல்ல நடவடிக்கையும் வளர்க்ககூடிய பல
புத்தகங்கள் ஆடியோ விடியோவுடன் இலவசமாக கிடைக்கிறது.
புத்தகங்களை அதுவே படித்து காட்டுகிறது ஒவ்வொரு பக்கமாக
திருப்புவதுமட்டும் தான் நமக்கு வேலை. பக்கத்தில் இருந்து
கொண்டு ஆசிரியர் சொல்வது போல் இருக்கிறது. படிக்கப்படும்
ஒவ்வொரு வார்த்தையையும் நமக்கு தேர்ந்தெடுத்து காட்டுகிறது.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் மிகவும் பயனுள்ள
இணையதளம்.

இணையதள முகவரி : http://www.meegenius.com
வின்மணி சிந்தனை
நாம் ஆதரவாக பேசுவதாக எண்ணி அடுத்தவர் மனம்
துன்பப்படுமேயானால் அதை விட சும்மா இருப்பதே மேல்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மண் அரிமானத்தை அதிகப்படுத்துவது எது ?
2.போர்ட் பிளேயர் எங்கு அமைந்துள்ளது ?
3.உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் உள்ளது ?
4.பாபர்மசூதி இடிப்புவழக்கு பற்றிய விசாரணை கமிஷனின் பெயர்?
5.எந்த கடற்கறை ஆந்திராவின் சவங்கிடங்கு எனக் கூறப்பட்டது ?
6.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் யார் ?  
7.செவ்வாய் கிரகப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘விகாஸ்
சங்கதாரா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
8.தோரியம் கிடைக்குமிடம் எது ?
9.இரட்டை விலகலை உண்டாக்குவது எது ?
10.பிரான்ஸ் நாட்டு தேசிய சின்னம் எது ?

பதில்கள்:
1.மரங்களை வெட்டுதல், 2.சிறிய அந்தமான்,3.நார்வே,
4.லிபர்கான் கமிஷன்,5.கினியா கடற்கரை, 6.கவர்னர்,
7.கர்நாடகா,8.திருவாங்கூர்,9.கால்சைட் படிகம்,10.லில்லி மலர்.

இன்று ஜூலை 13 
பெயர் : வோல் சொயிங்கா,
பிறந்ததேதி : ஜூலை 13, 1934

நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.
இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள்
மற்றும் நாவல்களை எழுதினார். இவரது
கவிதைகளும் நாடகங்களும் மிகவும்
குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. Libaran commision not libarkan

    ReplyDelete
  2. @ saravanan
    நண்பருக்கு , இல்லை லிபர்கான் தான் சரி என்று நினைக்கிறோம்.
    மேலும் தகவலுக்கு விக்கிபீடியா-வை பாருங்கள்.

    http://en.wikipedia.org/wiki/Liberhan_Commission

    நன்றி

    ReplyDelete
  3. இந்த முகவிரியில் சென்று பார்த்தேன் சவுண்ட் வரவில்லை அதற்க்கு என்ன செய்யா வேன்டும் என்பதை தெரியப்படுத்தவும் குழந்தைகளுக்கு நல்ல பயன்னுள்ள தளம்

    ReplyDelete
  4. @ mohamed Ali
    வேறு பாடம் தேர்ந்தெடுத்து பாருங்கள்.
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad