ஒன்றுக்குமேற்பட்ட கூகுள் கணக்கை ஒரே உலாவியில் திறக்கலாம்
இதைப் பற்றிதான் இந்தப் பதிவு.
ஒரு உலாவியில் ஒரு ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு
கூகுளின் எந்த சேவையை நாம் தொட்டாலும் இந்த கணக்கு தான்
திரும்ப திரும்ப வரும் உதாரணமாக நாம் ஜீமெயிலை திறந்து வைத்துக்
கொண்டு கூகுள் ரீடர் பயன்படுத்தினால் நாம் திறந்து வைத்து இருக்கும்
அதே கூகுள் கணக்கில் திறக்கும் இது ஒருபக்கம் பார்த்தால்
பிரச்சினையாகவும் மறுபக்கம் ஒவ்வொரு முறையும் நாம் கணக்கை
திறக்க வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும்
இருக்கும். இதற்காக கூகுளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்து
கொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில்
கணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
ஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும்
இதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம்
என்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
வெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன்
மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில்
கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
வின்மணி சிந்தனை
வெற்றிக்கு முதல் படி முயற்சி தான் , நல்ல செயலுக்காக
நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.வெற்றி
நாளை முதல் நம்மை பின் தொடரும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து
தயாரித்தனர் ?
2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு
அதிகமாக கொடுக்கிறது ?
3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது
தெரியவந்தது ?
4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின்
அளவென்ன ?
5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன ?
6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது?
7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக
தோன்றியது ?
8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள
நாடு எது ?
9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது ?
10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது?
பதில்கள்:
1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,
4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,
6.ரஷ்யா,7.கிரேக்க நாட்டில்,8.சிங்கப்பூர்,
9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.
இன்று ஜூலை 14
பெயர் : வோல் சொயிங்கா,
மறைந்ததேதி : ஜூலை 14, 2008
இவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல்
ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய
மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து
அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்
கொணர்ந்தவர்.1943ம் ஆண்டில் டோக்கியோ
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில்
கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
பணியாற்றினார்.1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான்
மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள்
விற்பனையாகின.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment