காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, June 19, 2010

காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஆப்பிள் ஐபோன் நம் கையில் இருந்து எங்கோ வைத்துவிட்டோம் என்று
தேடும் அனைவருக்கும் உதவும் வகையில் ஆப்பிள் ஐபோனை
கண்டுபிடிக்க புதிய மென்பொருள் ஒன்றை ஆப்பிள் நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.



அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை கூட எங்காவது வைத்து விட்டு
நமக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் ஐபோன்,
ஐபேட், ஐபாட் டச் (iPod touch) போன்றவைகள் எங்கு காணமல்
போனாலும் உடனடியாக ஆப்பிள் இணையதள உதவியுடன் இருக்கும்
இடத்தை எளிதாக கண்டுபிடிக்காலாம். இதற்க்காக ஆப்பிள் நிறுவனம்
புதிய மென்பொருள்ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.



ஐபோன் ஃபைண்டர் Mobile me என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த
மென்பொருளை நம் ஆப்பிள் ஐடிவைஸ்களில் நிறுவினால் போதும்
இதில் இருக்கும் Physical Location Finder உதவியுடன் நம் ஐபோன்
ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தாலும் அது இருக்கும் இடத்தை எளிதாக
கண்டுபிடிக்கலாம். இதற்காக ஆப்பிள் நிறுவனம் வருடத்திற்க்கு $99
டாலர் கட்டணம் வசூலிக்கிறது. நம் ஐபோன் மூலம் நாம் ஆப்பிள்
நிறுவனத்தின் இணையதளத்திற்க்கு சென்று புதிய பயனாளர் கணக்கை
உருவாக்கி கொள்ள வேண்டும். நம் ஐபோன் காணமல் போனலாம்
நாம் ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளமான
http://www.apple.com/mobileme என்ற தளத்திற்க்கு சென்று  நம்
பயனாளர் கணக்கை திறந்து கொண்டு நம் ஐபோன் எங்கிருக்கிறது
என்று தேடலாம்.





மேப் வசதியுடன் நம் ஐபோன் இருக்கும் இடம் தெளிவாக காட்டப்படும்
உடனடியாக நாம் சென்று எடுத்துக்கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை
அடுத்தவர்கள் செய்யும் தீமைகளை ஆராய்ச்சி செய்வதை
விடுத்து அவர்கள் செய்த நன்மையை மட்டும் சொல்வோம்.
இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது சிறந்தது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மூவண்ண டிராஃபிக் சிக்னல் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது ?
2.நிலநடுக்கத்தின் பாதிப்பை கண்டறியும் கருவியின்பெயர் என்ன?
3.மீன்பிடித்தலில் திறமை வாய்ந்த பறவை எது ?
4.நாய்களுக்கு நிற வேற்றுமைத் தெரியுமா ?
5.டென்னிஸ் விளையாட்டு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
6.இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது ?
7.மைசூர் புலி என்றால் அது யாரை குறிக்கும் ?
8.சுபாஸ் சந்திரபோஸை ஜெர்மானியர்கள் எவ்வாறு அழைத்தனர்?
9.பெண்களுக்கு முதலில் வாக்குரிமை அளித்த நாடு எது ?
10.செயற்கை கண்களை அதிகம் தயாரிக்கும் நாடு எது ?

பதில்கள்:
1.1914-ல், 2.சீஸ்மோ கிராஃப்,3.R.கார்மராண்ட்,
4.தெரியாது,5.1873-ஆம் ஆண்டு, 6.கர்நாடகா,7.திப்பு சுல்தான்,
8.ஸீனர் ஆர்லாண்டே மஸாட்டா,9.நியூசிலாந்து,10.ரஷ்யா.

இன்று ஜூன் 19 
பெயர் : பிலைய்சு பாஸ்கல் ,
பிறந்த தேதி : ஜூன் 19, 1623

ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர்,இயற்பியலாளர்
மற்றும் சமய மெய்யியலாளர்.கணிப்பான்களின்
(calculators) உருவாக்கத்திலும் பாய்மவியல்
தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்க
-தாகும்.இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும்
முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி
ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad