Adsense

மொபைல் போன்களை ஜார்ச் செய்ய இனி நாம் சிறிது தூரம்
நடந்தாலே போதும் எளிதாக மொபைலை ஜார்ச் செய்யலம்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.அமெரிக்காவின் ஆரஞ்சு டெலிகம்யூனிகேசன் உருவாக்கி இருக்கும்
புதிய காலனி ஒன்றின் மூலம் சிறிதுதூரம் நடந்தாலே நம் மொபைல்
போன்-ஐ ஜார்ச் செய்யலாம். சற்றே ஆச்சர்யமாக தான் இருக்கிறது.
இதற்க்காக வித்தியாசமான பூட்ஸ் போன்ற காலணி ஒன்றை
உருவாக்கியுள்ளனர். இந்த காலணியின் அடிப்பாகத்தில் ஏற்படும்
வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி நம் மொபைலில்
ஜார்ச் ஆகிறது. நம் மொபைல் போனை பாதுகாப்பாக அந்த காலனியில்
மாட்டி சிறிது தூரம் நடக்க வேண்டும் டான்ஸ் ஆடுவது போன்றவை
கூட செய்யலாம் நம் மொபைல் எளிதாக ஜார்ச் ஆகிவிடும்.
இதைப்பற்றிய சிறப்பு விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


வின்மணி சிந்தனை
வாழ்க்கையில் உழைப்புக்கேற்ற பணம் சம்பாதிக்க முடியவில்ல்லை
என்ற எண்ண வேண்டாம். நோயில்லாத வாழ்க்கையை இறைவன்
நமக்கு கொடுத்ததை விட பணம் பெரிதல்ல.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.உலகில் கடற்க்கரை இல்லாத நாடுகள் எத்தனை ?
2.சீனர்களின் முதல் கடவுள் யார் ?
3.இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எப்பொழுது கட்டப்பட்டது?
4.இந்தியாவில் வைரத்தொழிலுக்கு பேர் பெற்ற இடம் எது ?
5.தண்ணீரை விட 13 மடங்கு அடர்த்தியான உலோகம் எது ?
6.கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடித்தவர் யார் ?
7.மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ எது ?
8.எட்டு வயதிலே சர்வதேச அளவில் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
பட்டம் வென்றவர் யார்?
9.புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதிய கருவியின் பெயர் என்ன?
10.தன் படைவீரர்களுக்கு உப்பை சம்பளமாக கொடுத்த
மன்னன் யார்?

பதில்கள்:
1.26, 2.உப்பு,3.1802 ஆம் ஆண்டு,4.குஜராத் மாநிலம்,
5.பாதரசம், 6.மார்க்கோனி,7.பார்லிப் பூ,8.ஜாய் ஃபாஸ்டர்,
9.M.R.I (Magnetic Recenaning Imaging),10.ஜூலியஸ் சீசர்.

இன்று ஜூன் 20 
உலக அகதி நாள்
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்
பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம்
ஒன்றின்படி,அகதிகளுக்கான தமது ஆதரவினை
வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள்
தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல்வேறு
மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும்
நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து
பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள்
பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில்
ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

2 comments:

 1. நண்பருக்கு வணக்கம்,

  நடந்தால் மொபைல் ஜார்ச் ஆகும் நல்ல தகவல். இனி சார்ஜர்களுக்கு ஓய்வு கொடுத்திடலாம்.

  அப்படியே நடந்தால் வயிறு நிரம்புகின்ற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருந்தால் பார்த்து சொல்லுங்க... தொல்லையே இல்லை...

  பதிவுக்கு வாழ்த்துக்கள்

  அன்புடன்
  தமிழார்வன்.

  ReplyDelete
 2. @ தமிழார்வன்
  நன்றி

  ReplyDelete

 
Top