Adsense

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான
புதிய ஆச்சர்யமான அசையும் விளையாட்டு கருவியைப்பற்றி தான்
இந்த பதிவு.சோனி நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விளையாடும் ஒரு ஆச்சர்யமான விளையாட்டு கருவியை
உருவாக்கியுள்ளது.பிளே ஸ்டேசன் என்ற பெயரில் நம் கையால்
படாதபாடுபடும் கீபோர்ட் மற்றும் மவுஸுக்கு விடுதலை அளித்து
கையடக்கமான டார்ச்லைட் போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளது
இந்த விளைட்டில் நாம் சாதாரனமாக எப்படி விளையாடுவோமோ
அப்படி விளையாட வேண்டியது தான் நம் கையின் அசைவில் ஏற்படும்
மாற்றத்திற்க்கு ஏற்ப இது வேலை செய்கிறது. எதிரே இருக்கும்
மானிட்டரில் ( Eye Camera) கேமிராவானது நம் கையின் அசைவுகளுக்கு
தகுந்த மாதிரி இன்புட் எடுத்து கொள்கிறது. டென்னிஸ் விளையாடும்
ஒரு வீரர் எப்படி விளையாடுவாரோ அப்படி நாம் இதில் விளையாடலாம்
நம் கையில் பேட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்
கையில் இந்த டார்ச் லைட்போன்ற கருவி இருக்க வேண்டும். உட்கார்ந்த
இடத்தில் இருந்து விளையாடுவதற்குப் பதில் நம் உடலை அங்கும்
இங்கும் அசைத்தும் விளையாடும் இந்த விளையாட்டு நல்ல
உடற்பயிற்ச்சி தான். இன்னும் பெயர் வைக்காத இந்த கருவி இந்த
ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும்இத்துடன் இணைத்துள்ளோம்.


வின்மணி சிந்தனை
அனைத்தும் அறிந்தவனும் பேச மாட்டான் ஒன்றுமே
தெரியாதவனும் பேச மாட்டான் ஆனால் அரை குறை
தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.முதல் இந்திய நாணயம் எப்போது தயாரிக்கப்பட்டது ?
2.அமெரிக்காவில் எப்போது தேசிய கீதம் இயற்றப்பட்டது ?
3.இந்தியாவில் துண்டு விழாத பட்ஜெட் எப்போது யாரல் தாக்கல்
  செய்யப்பட்டது ?
4.நான்கு கால் பிராணிகளில் நீந்த தெரியாத மிருகம் எது ?
5.கொரியாவின் தேசியத்தொழில் எது ?
6.தேசிய நிகழ்ச்சியின் போது இரண்டு தேசிய கொடிகளை
ஏற்றும் நாடு எது ?  
7.அஞ்சல் குறியீட்டுஎண் முறை அமல்செய்யப்பட்டது எப்பொழுது?
8.இந்தியா வின்வெளியில் எப்போது அடி எடுத்து வைத்தது ?
9.இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெறும் மாநிலம் எது ?
10.ஷராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின்
 பெயர் என்ன ?

பதில்கள்:
1.1757-ல் கல்கத்தா நகரில் 2.1931 3.R.K.சண்முகம் செட்டி
1947-ல், 4.ஓட்டகம்,5.கப்பல் கட்டும் தொழில்,
6.ஆப்கானிஸ்தான்,7.1972-ல், 8.1975-ஆம் ஆண்டு,
9.கேரளம்,10.காந்தி சாகர்.

இன்று ஜூன் 18 
பெயர் : தாபோ உம்பெக்கி ,
பிறந்த தேதி : ஜூன் 18, 1942

தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர்.
14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்
கட்சியை சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில்
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல்
படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில்
அபார்ட்டைட் முடிந்து நெல்சன் மண்டேலா குடியரசுத்
தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி
துணைத் தலைவராக பதவியில் ஏறினார்.1999-இல்
உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

11 comments:

 1. வந்தா வாங்கிற வேண்டியது தான். நல்ல உடபயிற்ச்சியும் கூட. இனிமே IT People தொப்பையில்லாம இருக்கலாம்

  ReplyDelete
 2. It is not new technology, already introduced by WII.

  thanks
  kader

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி விண்மனி

  தமிழ்நாட்டுக்கு தகுந்த போல் சோனி இந்த விளையாட்டில் மஞ்சு விரட்டு உருவாக்கினால் இந்த டார்ச் வச்சி களையை அடக்கின பெருமை நமக்கு கிடைக்கும்.


  :-)

  ReplyDelete
 4. உடற்பயிற்சியோடு மூளைக்கும் வேலை கொடுபதால் இந்த கருவிக்கு அமோக வரவேற்பு இருக்கும்.

  ReplyDelete
 5. @ புதுவை சிவா
  கண்டிப்பாக...நமக்கு தான் கிடைக்கும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. @ abulbazar
  சரிதான்...
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. ohh hoooo! Wii ennu oru game ithapolave vanthu sila varudankal akinrathe?

  ReplyDelete
 8. @ nagendren
  மிக்க நன்றி

  ReplyDelete

 
Top