பிளிக்கரில் உள்ள புகைப்படங்களை பேஸ்புக்-ல் இணைக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, June 10, 2010

பிளிக்கரில் உள்ள புகைப்படங்களை பேஸ்புக்-ல் இணைக்கலாம்

பிளிக்கரில் நாம் வைத்திருக்கும் படங்களை இனி பேஸ்புக்-ல்
உள்ள நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எப்படி என்பதை
பற்றி தான் இந்த பதிவு.

பிளிக்கரில் இருந்து ஒவ்வொரு புகைப்படமாக தரவிரக்கி
அதை பேஸ்புக்-ல் சென்று தரவேற்றம் செய்திருப்போம் இனி
நேரடியாக நம் பிளிக்கர் கணக்கில் உள்ள புகைப்படங்களை
எளிதாக சில நிமிடங்களில் பேஸ்புக்கில் இணைக்கலாம்.
பேஸ்புக்கும் யாகூவும் இணைந்த செய்தி நாம் அறிந்த ஒன்று
தான் ஆனால் இப்போது தேடுபொறியையும் தாண்டி யாகூ
கொடுக்கும் சேவைகளில் ஒன்றான பிளிக்கரில் இருந்து
பேஸ்புக் - புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற
செய்தியை தற்போது அறிவித்துள்ளது.

http://www.flickr.com/account?tab=extend

[caption id="attachment_2337" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளிக்கரின் முகவரியை
சொடுக்கி படம் 1-ல் காட்டியபடி Connect என்ற பொத்தானை
அழுத்தி பிளிக்கரில் இருந்து பேஸ்புக் உடன் இணையலாம்.
வின்மணி சிந்தனை
எந்த மனிதனையும் கடவுளாக பார்க்கும் குணம்
நமக்கு வந்துவிட்டால் நாம் கோவிலுக்கு செல்ல
வேண்டியதில்லை.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பாலைவனமே இல்லாத கண்டம் எது ?
2.’மாட்ரிட்’ எந்த நாட்டின் தலைநகர் ?
3.’ரொட்டி காளன்’ எனப்படுவது எது ?
4.ஈ.வெ.ரா. நகர்மன்ற தலைவராக இருந்த ஊர் எது ?
5.’பென்சீன்’ கண்டிபிடித்தவர் யார் ?
6.’செலனோகிராபி’ என்பது என்ன ?
7.சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்த ஆண்டு ?
8.’டோலக்’ என்னும் வாத்திய கருவி எதனால் செய்யப்படுகிறது?
9.பிரபல நூலாசிரியர் ‘ஹோமர்’ எந்த நாட்டை சேர்ந்தவர்?
10.மகாபாரதத்தில் தேவகியின் சகோதரன் பெயர் என்ன ?

பதில்கள்:
1.ஐரோப்பா, 2.ஸ்பெயின், 3.மியூக்கர், 4. ஈரோடு,
5.மைக்கேல் பாரடே, 6.சந்திர நிலப்பரப்பு பற்றிய ஆய்வு,
7.1962,8.தோல், 9.கிரீஸ்,10.கம்சன்

இன்று ஜுன் 10 
பெயர் : வே. தில்லைநாயகம் ,
பிறந்த தேதி : ஜூன் 10 ,1925

தமிழக நூலகத்த்துறையின் பிதாமகர்.நூலக
இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும்
இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற
இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக
இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும்
இவரைப் புகழ்துள்ளார்கள். இவரை தமிழக நூலக
இயக்கத்தின் முன்னோடி என்றும் தந்தை என்றும்
அழைக்கலாம்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad