உலககோப்பை கால்பந்து போட்டியின் செய்திகளை உடனுக்கூடன் டிவிட்டரில் பார்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, June 9, 2010

உலககோப்பை கால்பந்து போட்டியின் செய்திகளை உடனுக்கூடன் டிவிட்டரில் பார்க்கலாம்.

உலககோப்பை கால்பந்து போட்டியின் அனைத்து தகவல்களையும்
உடனுக்கூடன் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதற்க்கு வசதியாக
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதைப்பற்றிய சிறப்பு பதிவு



உலககோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும்
ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்ற்கும்
இந்த போட்டியின் அனைத்து செய்திகளையும் உலக மக்கள்
அனைவரும் தெரிந்து கொள்வதற்க்கும் தங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்வதற்க்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு
உள்ளது.



உலகோப்பை கால்பந்து போட்டியில் நடக்கும் அத்தனை
செய்திகளையும் உடனடியாக நாம் டிவிட்டரில் பார்த்து தெரிந்து
கொள்ளலாம். அனைத்து நாட்டு மக்களுக்கும் அன்றையதினம்
விளையாடும் வீரரின் தகவல்களை கூட தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டியின் முடிவுகளையும் நம் கருத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம். கால்பந்து போட்டியின் ரசிகர்களுக்கு
மகிழ்சியான செய்தியாக இருக்கும்.

டிவிட்டர் முகவரி
http://twitter.com/TM_worldcup2010
http://twitter.com/2010OC
வின்மணி சிந்தனை
ஒருவன் 100 வயது வரை வாழ்வதாக எடுத்துக்கொண்டால்
இதுவரை வாழ்ந்த நாட்களை கழித்து இனி எவ்வளவு
நாட்கள் வாழப்போகிறோம் என்று நினைத்து பார்த்தால்
இனி கண்டிப்பாக அவன் தவறு செய்யவே மாட்டான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஜப்பானியர்களின் ‘அபாக்கஸ்’ முறைக்கு என்ன பெயர் ?
2.உலகின் முதல் ’மின்னணு கம்ப்யூட்டர்’ எது ?
3.மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு எது ?
4.பூமியில் பரவியுள்ள ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு ?
5.சிவாஜி மன்னராக முடி சூடி கொண்ட இடம் எது ?
6.’பழமொழி’ நூலை வடிவமைத்தவர் யார் ?
7.உலகிலேயே மிகவும் பெரிய தீபகற்பம் எது ?
8.மூளையின் நிறம் என்ன ?
9.’குளோரின்’ என்பது எம்மொழி வார்த்தை ?
10.எப்போதும் புயல் வீசிக்கொண்டிருக்கும் கோள் எது ?

பதில்கள்:
1.ஸாரபான், 2.எனியாக், 3.1761, 4. 44.6%,
5.ரெய்கார்க், 6.முன்றுரை அரையனார்,7. அரேபியா,
8.பழுப்பு நீலம், 9.கிரேக்கம்,10.வெள்ளி

இன்று ஜுன் 9 
பெயர் : கிரண் பேடி ,
பிறந்த தேதி : ஜூன் 9 ,1949

இந்தியாவின் ’இந்திய காவல் சேவைப்பணியில்’
1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி
ஆவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு
பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள்
செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த
பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. CAN WE SEE IT THRO THE INTERNET LIKE T 20 WORLD CUP

    ReplyDelete
  2. @ LVISS
    http://worldcuplivestream.com
    நன்றி

    ReplyDelete
  3. THANK YOU .SIR.
    THE MATCHES CLASH WITH SERIALS AND MOST PEOPLE WILL NOT LIKE TO ENTER INTO A FIGHT FOR THE MOUSE.

    ReplyDelete

Post Top Ad