பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, May 24, 2010

பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.

உலகில் அதிகமான மக்களை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும்
முதல் சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.பேஸ்புக் சில மாதங்களுக்கு முன் தான் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டினர் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்
இப்போது முன்பைவிட சற்று அதிகமாக தாக்கியுள்ளனர் அதாவது
நீச்சல் குளத்தில் குழந்தை ஒன்று குளிக்கும் ஆபாச விடியோவை
ஏற்றியுள்ளனர். பேஸ்புக்-ல் இந்த முகவரியை சொடுக்கிய அனைத்து
கணினியும் மால்வேர் -ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்-ல் மால்வேர்
என்று பரவிய அடுத்த சில மணி நேரத்திற்க்குள் பிரச்சினையை
கண்டுபிடித்தும் அதை தீர்க்க முடியாமல் தினறியுள்ளனர். யார்
அனுப்பினார்கள் எங்கிருந்து அனுப்பினார்கள் என்ற எந்த தகவலும்
தெரியவில்லை சராசரியாக பல இலட்சம் மக்கள் கணினி இதனால்
பாதிக்கப்பட்டுள்ளது.  பேஸ்புக் -ல் உடனடியாக பாதுக்காப்புக்கு என்று
பல வல்லுனர்களை நியமித்து இனி இதுபோல் பிரச்சினை வராமல்
தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எத்தனை
தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்தாலும் அவர்களால் இந்தப்
பிரச்சினைக்கு முடிவு எடுப்பது சற்று கடினம் தான் அதை விடுத்து
கணினி கொள்ளையர்களில் நல்லவர்கள் சிலபேரை வேலைக்கு
வைத்தாலே இந்தப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடும்.
வெறும் படிப்பறிவு உள்ளவர்களால இந்தப்பிரச்சினை தீர்ப்பது
சற்று கடினம் தான். பாம்பின் கால் பாம்பறியும்.  இதே போல்
முந்தைய பேஸ்புக் வைரஸைப்பற்றிய நம் பதிவைப்
பார்க்க இங்கே சொடுக்கவும்.

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
வின்மணி சிந்தனை
வயதான பெரியவர்கள்களிடம் அன்பு காட்டுங்கள் காதலை
விட சிறந்த அன்பு அதுதான் என்று உணர முடியும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள் என்ன ?
2.உலகில் இரண்டாவது உயர்ந்த கோபுரம் ?
3.அமெரிக்க எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது ?
4.இந்தியாவின் முதல் செயற்க்கைகோள் எது ?
5.அணுக்கதிர் வீச்சினால் அழியாத உயிரினம் ?
6.நம் உடலில் பித்த நீரை சுரக்கும் சுரப்பி எது ?
7.மிசோரத்தின் தலைநகரம் எது ?
8.தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது ?
9.மனிதனைப்போல் நடக்கும் பறவை எது ?
10.’காற்று நகரம்’ என்று எந்த நகரத்தைக் குறிப்பிடுகின்றோம் ?

பதில்கள்:
1.துத்தநாக ஆக்சைடு, 2.மிரத் கோபுரம், 3.1888,
4.ஆரியப்பட்டா,5.கரப்பான் பூச்சி, 6.கல்லீரல்,
7.ஐஸ்வாஸ்,8.1957,9.பென்குவின் ,10.சிகாகோ

இன்று மே 24 
பெயர் : விக்டோரியா ,
பிறந்த தேதி : மே 24, 1819

இந்தியாவின் முதல் பேரரசியாக 1876
மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்
63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை
பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட
ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad