ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, May 23, 2010

ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்

ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை அல்ல, பலவற்றை நாம் தவறாகத்
தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறோம் இப்படி இருக்க ஆங்கில
வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தர ஒரு
அருமையான இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_2141" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_2142" align="aligncenter" width="243" caption="படம் 2"][/caption]

ஆங்கில மொழி நாட்டுக்கு நாடு உச்சரிக்கும் விதம் வேறுபட்டிருப்பது
நாம் அறிந்தது தான் ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கில மொழி
வார்த்தைகளை உச்சரிப்பு விதம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
ஆங்கில மொழியின் உண்மையான வார்த்தை உச்சரிப்பை நாம்
இணையதளம் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு
சேர இருக்கும் நண்பர்களுக்கும் , மாணவர்களுக்கும் , ஆங்கிலப்
புலமை பெற்றவர்களுக்கும் சில வார்த்தை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்ற சந்தேகம் இருக்கலாம் அனைத்துக்கும் தீர்வாக இந்த
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.inogolo.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள
கட்டத்திற்க்குள் எந்த வார்த்தைக்கான உச்சரிப்பு வேண்டுமோ அதை
கொடுத்தபின் seaech names என்ற பொத்தனை அழுத்தவும் சில்
நொடிகளில் நாம் தேடிய வார்த்தையைப்பற்றிய விபரங்களுடன் அதை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் படம் 2-ல் இருப்பது போல்
காட்டப்படும். இதில் இருக்கும் play என்ற ஐகானை சொடுக்கி நாம்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் கேட்டுக்
கொள்ளலாம்.உதாரணமாக நாம் india என்ற வார்த்தையை கொடுத்து
சோதித்துப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக இந்தத் தளம் அணைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
தன் தாய் மொழி வளர்ச்சிக்காக ஒருவன் செய்யும் உதவி தன் தாய்க்கு செய்யும் உதவி போன்றதாகும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகம் எது ?
2.மின் விசிறியை கண்டுபிடித்தவர் யார் ?
3.நைஜீரியாவின் தலைநகரம் எது ?
4.’கதக்’ என்பது எந்த மாநிலத்தின் நடனமாகும் ?
5.ஏழைகளின் சஞ்சீவி எனப்படுவது எது ?
6.’மாலவன் குன்றம்’ எனப்படுவது எது ?
7.புதன் சூரியனை சுற்ற எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது ?
8.ஈக்களுக்கு பிடிக்காத நிறம் எது ?
9.நேபாள நாட்டு நாடாளுமன்றத்தின் பெயர் ?
10.சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெடை சமர்ப்பித்தவர் யார் ?

பதில்கள்:
1.புளுட்டோ, 2.ஆய்லர் எஸ்.வீலர், 3.லாகோஸ்,
4. உத்திரபிரதேசம்,5.பூண்டு, 6.திருப்தி,7.88 நாட்கள்,
8.நீலம்,9.நேஷனல் பஞ்சாயத் ,10.  ஆர்.கே.சண்முகம்

இன்று மே 23 


பெயர் : ஹென்ரிக் இப்சன் , 
பிறந்த தேதி : மே 23, 1906

நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.
நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும்
ஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.
இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. SOMETHING LIKE DICTIONARY.COM .

    ReplyDelete
  2. Nigeria capital ?

    Present = Abuja

    Former = Lagos

    ReplyDelete
  3. @ LVISS
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ dastagir
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. திரு வின்மணி,

    நான் IT துறைக்குப் புதிவன். ஓரளவு கனிணியைப் பயன்படுத்தத் தெரியும்.
    என் போன்றோருக்கு ( அகப்பக்கம் உருவாக்க ஆசை உள்ளவர்கள்) உதவும் ஒரு பதிவைப் போட்டீர்களானால் நன்றாயிருக்கும். இணையத்தில் உள்ளவற்றைப் படித்து விட்டு முயன்றும் முடியவில்லை.
    எளிய முறையில் step by step -பாக இருந்தால் நல்லது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. @ தணிகாசலம்
    கண்டிப்பாக விரைவில் வெளியிடுகிறோம்.
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad