5 ஆண்டு உழைப்பில் யூடியுப்-ன் நிகரில்லாத மெகா சாதனை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, May 22, 2010

5 ஆண்டு உழைப்பில் யூடியுப்-ன் நிகரில்லாத மெகா சாதனை

இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் நாம்
உடனடியாக தேடுவது யூடியுப் தான் அந்த அளவிற்க்கு கடந்த
5 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி பெற்று தற்போது புது
சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. இதைப்பற்றிய சிறப்பு
பதிவு.



2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியுப் நிறுவனம்
இணையதளத்தில் அனைவரும் இலவசமாக வீடியோ நிகழ்ச்சிகளை
இலவசமாக பகிர்ந்து கொள்ள இலவசமாக இடவசதி கொடுப்பது
உள்ளீட்ட பல சேவைகளை வழங்கியது. அனைத்தும் பார்ப்பதற்க்கு
நமக்கு புதிதாகத்தான் இருந்தது அதன் பின் ஒவ்வொருவருடமும்
இதன் சேவை அதிகமாக வழங்கப்பட்டுவருகிறது. இப்போது இதன்
வளர்ச்சி அளவுக்கு பல இலட்சம் வாடிக்கையாளரை பெற்றதோடு
மட்டுமல்ல ஒரே நாளில் இரண்டு பில்லியன் மக்கள் பார்க்கும்
ஒரு இணையதளமாக வளர்ந்துள்ளது என்றால் இதன் வளர்ச்சிக்கு
முக்கிய காரணம் உழைப்பு மட்டுமல்ல அதையும் தாண்டி யூடியுப்
நிறுவனத்தை 2006 ஆம் ஆண்டு கூகுள் வாங்கியதும் முக்கிய
காரணமாக உள்ளது. இதற்க்காக யூடியுப் நிறுவனத்தின் அனைத்து
ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த வருடம் வரை உள்ள சாதனையை
விளக்கும் ஒரு வீடியோ காட்சியையும் இத்துடன் இணைத்துள்ளோம்






வின்மணி சிந்தனை
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள்
கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
2.எரித்யா நாட்டின் தலைநகர் எது ?
3.பால்டிக் கடலின் ஆளம் என்ன ?
4.இமயமலையின் உயரம் என்ன ?
5.பஞ்சாட்சரம் என்பது என்ன ?   
6.பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?
7.இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ?   
8.தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ?
9.கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?  
10.தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?  

பதில்கள்:
1.95%,2.அண்மரா, 3.180 அடி, 4. 8 கீ.மீ,
5.நமசிவாய,6.ராஜாராம் மோகன்ராய்,
7.விண்டோன் செர்ஃப்,8.1953,
9.ஆர்த்ரோ போடா,10.ராஜ்பவன் 

இன்று மே 22 
பெயர் : விக்டர் ஹியூகோ,
மறைந்த தேதி : மே 22, 1885

ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும்
புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக்
கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள்
ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய
இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad