Adsense

உங்களுக்கு எழும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை
அளிக்க இணையதள வாசிகள் பலபேர் உள்ளனர். நம் கேள்விகள்
மற்றும் பதிலை வீடியோ மூலம் கூட கேட்கலாம் எப்படி என்பதை
பற்றிய ஒரு சிறப்பு பதிவு.[caption id="attachment_2159" align="aligncenter" width="416" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_2160" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

தினமும் எத்தனை கேள்விகள் நம்மிடம் எழுகின்றன அத்தனை கேள்வி
களுக்கும் விடை தேடி எங்கும் அலையவேண்டாம் உடனடியாக எந்தத்
துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். மாணவர்களுக்கு
எழும் கேள்விகள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எழும்
சந்தேகம் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் நாம் கேள்விகளை வீடியோ மூலம்
கூட கேட்கலாம். பதில் வீடியோவாக நமக்கு கிடைப்பது உண்டு.
இணையதள முகவரி : http://plank.ly
இந்தத்தளத்திற்க்கு சென்று நாம் கேட்க விரும்பும் கேள்விகளை
படம்-1ல் காட்டியபடி எளிதாக  நம் டிவிட்டர் முகவரி மூலம் கூட
கேட்கலாம். விடியோ மூலம் கேள்விகேட்க விரும்பும் நபர்கள்
தங்களுக்கென்று என்று ஒரு இலவச கணக்கை இந்தத்தளத்தில்
உருவாக்கிக்கொள்ளவும். எல்லாத்துறை நண்பர்களும் நிறைந்து
இருப்பதால் நாம் கேள்விகளை கேட்ட சில மணி நேரங்களில்
பதில் கிடைத்திவிடும். நாம் இந்த தளத்தில் வேறு யாரோ கேட்ட
கேள்விக்கு பதில் தெரிந்தால் கூட பதில் அளிக்கலாம். கண்டிப்பாக
இந்தத்தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும்
அடுத்தவர் மனது துன்பப்படாமல் பேசுபவன்
இறைவனை தேடி எங்கும் அலையவேண்டாம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சந்திரன் பூமியை எத்தனை கீ.மீ வேகத்தில் சுற்றுகிறது ?
2.பாலில் உள்ள சர்க்கரைக்கு அறிவியல் பெயர் என்ன ?
3.ஆடிப்பெருக்குடன் தொடர்புடைய நதி எது ?
4.சர் ஐசக் நீயூட்டன் எந்த வகை கணிதத்தை உருவாக்கினார் ?
5.சூடான் நாட்டின் தலைநகரம் எது ?
6.கடல் நண்டின் இரத்தம் என்ன நிறத்தில் இருக்கும் ?
7.கந்தக அமில உப்புகளின் பெயர் என்ன ?
8.டிராபிக் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?
9.கொழும்பு நகரின் மற்றொரு பெயர் என்ன ?
10.’மதர்’  என்ற ஆங்கில நாவலின் ஆசிரியர் யார் ?

பதில்கள்:
1.3680 கீ.மீ, 2.லாக்டோஸ், 3.காவிரி,
4.கால்குலஸ்,5.கார்ட்டோம், 6.நீலம்,7.சல்பேட்டுகள்,
8.ஜே.பி.நைட்,9.ஸ்ரீ ஜெயவர்த்தனாபுரா,10.மாக்ஸிம் கார்க்கி
 

இன்று மே 25 
பெயர் :  மு. சி. பூரணலிங்கம் ,
பிறந்த தேதி : மே 25, 1866

தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும்,
உயர்வையும் பிற மொழியினரும் அறியும்
வண்ணம் அயராது உழைத்தவர்.தமிழ்ப் பற்றும்
தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்தவர்.
உங்களால் பாரத தேசத்துக்குப் பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

12 comments:

 1. // 9.கொழும்பு நகரின் மற்றொரு பெயர் என்ன ?

  9.ஸ்ரீ ஜெயவர்த்தனாபுரா //

  இது பிழையானது.

  ஸ்ரீ ஜெயவர்தனபுர கொழும்பின் மறுபெயரல்ல...

  http://en.wikipedia.org/wiki/Sri_Jayawardenapura_Kotte
  http://en.wikipedia.org/wiki/Colombo

  கொழும்பு என்பது இலங்கையின் வர்த்தக தலைநகர், மறுபுறத்தில் ஸ்ரீ ஜெயவர்தனபுர இலங்கையின் தலைநகர்.

  ReplyDelete
 2. @ Krishna
  தகவல் பதிவேட்டில் இந்தப்பதில் தான் இருக்கிறது. கொழும்பு நகரின் மற்றொரு பெயர் ஸ்ரீலங்கா என்று மாற்றிவிடலாமா ?
  நன்றி

  ReplyDelete
 3. many type of names in electrical and civil services

  ReplyDelete
 4. 1 கன அடியில் எத்தனை லிட்டர் நீர் இருக்கும்?

  ReplyDelete
 5. indhiraganthi rajivganthin ammavin ____________ ?


  pls i want this ans this question.

  ReplyDelete
 6. ஆற்றில்

  ReplyDelete

 
Top