கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் பாதுகாப்பு தேடல் வசதி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, May 21, 2010

கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் பாதுகாப்பு தேடல் வசதி

தேடுபொறியில் தனக்கு நிகர் என்று ஏதும் இல்லாமல்
அன்றிலிருந்து இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் கூகுள்
இப்போது புதிதாக பாதுகாப்பு தேடல் என்ற வசதியை
அறிமுகப்படுத்த இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.



கூகுளின் தேடினால எல்லா இணையதளங்களையும் தேடி சில
நொடிகளில் முடிவுகளை அப்படியே கொட்டும் ஆனால் தற்போது
அந்த முடிவுகளில் பாதுகாப்பானது என்ற ஒன்றையும் சேர்த்து
அடுத்தகட்ட சோதனைக்கு தயாராகிவிட்டனர்.எந்த இணையதளத்தில்
பாதுகாப்பிற்க்கு தொந்தரவு இல்லாமல் இருக்கிறது அந்த இணைய
தளங்களை வரிசைப்படுத்தி நமக்கு காட்டும். இதற்க்காக SSL என்று
சொல்லக்கூடிய Secure Socket Layer என்ற முறையினைப்
பின்படுத்தி பாதுகாப்பு தளங்களை நமக்கு காட்டுகிறது. இதன் சோதனை
வெற்றிகரமாக நடந்து முடிந்ததால் அடுத்ததாக இப்போது கூகுள்
தன் லோகோவையும் சிறிய பூட்டு வடிவ பாதுகாப்பு படத்தையும்
சேர்த்துள்ளது. இப்போது கூகுள் பாதுகாப்பு தேடல் பயன்படுத்த
வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்  இங்கே உள்ள முகவரியை
சொடுக்கவும். https://www.google.com
வின்மணி சிந்தனை
அன்பான மக்கள் நம்மை விட்டு சிறிது பிரிந்து
சென்றாலும் நம் மனம் அவர்களைத்தேடுகிறது
உண்மையான அன்பு ஏதும் எதிர்பார்ப்பதில்லை.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளது ?
2.தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச்செயலாளர் யார் ?
3.பாம்பின் விஷம் எந்த நிறத்தினை கொண்டது ?
4.எந்த கிரேக்க தத்துவ மேதைக்கு எழுத படிக்கத்தெரியாது ?
5.அஜர்பைஜான் நாட்டின் தலைநகரம் எது ?
6.அதிக அளவில் வெள்ளி கிடைக்கும் நாடு எது ?
7.பூமி தன் அச்சில் எந்தத்திசையில் சூழல்கிறது ?
8.நைலானை கண்டுபிடித்தவர் யார் ?
9.நீர் யானை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் நாடு எது ?
10.இத்தாலி நாட்டின் நாணயத்தின் பெயர் ?

பதில்கள்:
1.ஒன்பது,2.லஷ்மி ப்ரனேஷ், 3.வெளிர் மஞ்சள்,4. சாக்ரடீஸ்
5.பாகு,6.மெக்ஸிகோ, 7.மேற்கிலிருந்து கிழக்காக,
8. காரத்தர்ஸ்,9.ஹங்கேரி,10. லிரா

இன்று மே 21 
பெயர் : எம். என். நம்பியார்,
பிறந்த தேதி : மே 21, 1919

தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்
திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள்
ஒருவராகத் திகழ்ந்தார். அன்பான குணமும்
பாசமும் கொண்ட சிறந்த மனிதர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

  1. இது வைரஸ் பாதுகாப்பா?, சட்ட ஒழுங்கு பாதுகாப்பா?, ஆபாச பாதுகாப்பா?, ரகசிய தேடலா? எந்த வகையில் பாதுகாப்பான தேடலைத் தரும் என்று கூறினால் இன்னும் சிறப்பாகயிருக்கும்

    ReplyDelete
  2. I CHANGED MY SEARCH ENGINE TO GOOGLE.COM FROM .CO.IN DOES IT NOT APPLY TO GOOGLE.CO.IN BECOZ I SEE NO PADLOCK IN THAT .

    ReplyDelete
  3. @ நீச்சல்காரன்
    நீங்கள் கூறிய அனைத்து பாதுகாப்பும் உண்டு , வைரஸ் , சட்டம் , இரகசிய பாதுகாப்பு மற்றும் ஆபாசபாதுகாப்பு.
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. useful to students.great job. pls continue

    ReplyDelete
  5. முஹம்மது நியாஜ்May 22, 2010 at 8:59 AM

    எனது கம்பியூட்டர் மற்றும் Pen Drive யில் NEW FOLDER.EXE என்ற வைரஸ் இருக்கின்றது இதனை எப்படி format செய்யாமல் நீக்குவது. அல்லது Format செய்வது தான் சரியா?. தயவு செய்து விபரம் தரவும்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  6. @ c.p.senthilkumar
    நன்றி

    ReplyDelete
  7. @ முஹம்மது நியாஜ்

    ஆப்ரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்களை கூறுங்கள்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad