புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, May 20, 2010

புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி

புகைப்படங்களை தேடுவது என்று எடுத்துக்கொண்டாலே அதில் நம்
அனைவரும் பயன்படுத்துவது கூகுள் தான் ஆனால் படங்களை
தேடுவதில் கூகுளையும் சற்று திரும்பிபார்க்க வைத்த இணையதளம்
ஒன்று இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

[caption id="attachment_2117" align="aligncenter" width="438" caption="படம் 1"][/caption]




[caption id="attachment_2118" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

தேடுதல் முடிவுகளை சரியாகக்காட்டுவது மட்டும் ஒரு தேடுபொறிக்கு
அழகல்ல அதையும் தாண்டி நாம் தேடிய வார்த்தையில் தற்போது
நடந்திருக்கும் நிகழ்ச்சிகளையும் காட்ட வேண்டிய கடமை என்று
ஒன்று இருக்கிறது அந்த வகையில் கூகுளுக்கு சவால் விடக்கூடிய
வகையில் ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://nachofoto.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
கட்டத்திற்க்குள் நாம் தேட வேண்டிய வார்த்தையை கொடுத்து
search images என்ற பொத்தனை அழுத்தவேண்டியது தான்
நாம் தேடிய வார்த்தைக்கு இணையாக உள்ள படம் வகைப்
படுத்தப்பட்டு நமக்கு காட்டப்படும் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக Tamil என்ற வார்த்தையை நாம் இந்த தேடுபொறியில்
கொடுத்து பார்த்தோம் ஆச்சர்யம் தான். தேடுதல் முடிவுகளில்
தற்போது தற்போது இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தகவல்களும்
தமிழ் இணையமாநாட்டிற்க்கான பாடல் வெளியீட்டு விழாவின்
படங்களும் சிங்கம் படத்தின் புகைப்படங்களும் மேலும் பல
வகையாகப் பிரிக்கப்பட்டு நம் காட்சிக்கு வந்தன. நாமும் இதே
Tamil என்ற வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினோம் முடிவுகள்
நாம் எதிர்பார்த்தப்படி இல்லை சரி கூகுளிலும் “Latest "  "past 2Days "
போன்றவற்றை மாற்றியும் கொடுத்துப்பார்த்தோம் எதிர்பார்த்தது
கிடைக்கவில்லை. தேடுபொறியில் கூகுளை மிஞ்ச ஆள் இல்லை
என்பது உண்மைதான் ஆனால் இந்த தேடுபொறியில் நாம் படங்களைத்
தேடிபார்த்தபின் இனி கூகுளில் படங்களை தேடமாட்டோம் அந்த
அளவிற்க்கு எளிமையாகயும் சிறப்பாகவும் உள்ளது.




வின்மணி சிந்தனை
புது இடங்களுக்கு நாம் செல்லும் போது மனதை
இறுக்கமாக வைத்திருக்காமல் மனதை அன்பாக
வைத்திருந்தால் நம் முகம் அடுதவர்களை நம்
பக்கம் அன்பால் ஈர்க்கும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த கோள் மிக அதிக துனைக்கோளை கொண்டுள்ளது ?
2.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் ?
3.இரத்தச் சிவப்பு அனுக்களை உருவாக்கும் திசு எது ?
4.தொலைபேசியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
5.இந்தியாவின் தங்கமங்கை என்றழைக்கப்பட்ட வீராங்கனை யார்?
6.கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது?
7.மாரடைப்பு நோயின் மூலக்காரணம் எது ?
8.குதிரையின் சராசரி ஆயுட்காலம் என்ன ?
9.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
10.’கிபாட்’ என்பது எந்த நாட்டின் நாணயம் ?

பதில்கள்:
1.சனி,2.கவர்னர், 3.போன்மேரா,4. கிரகாம் பெல்
5.பி.டி.உஷா,6.கும்பகோணம், 7.அதிகமான இரத்தஅழுத்தம்,
8. 60 ஆண்டுகள்,9.அஸிட்டிக் அமிலம்,10. பர்மா




இன்று மே 20 
பெயர் : எடுவர்டு பூக்னர்,
பிறந்த தேதி : மே 20, 1860

ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்
நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே
நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக,
1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்.



PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. சார், நீங்கள் தினமும் தரும் தகவல்கள் ஆச்சரியமும், புதுமையாகவும் இருக்கிறது. சார், எனக்கு "சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி?" என ஒரு ஆய்வு கட்டுரை ஒன்று தயாரிக்க விரிவான தகவல்கள் தாருங்கள்...............

    ReplyDelete
  2. @ Bibin Suresh
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad