3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, May 10, 2010

3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 3D -ல் நமக்கு
பிடித்த பொம்மை வடிவங்களை எளிதாக எப்படி உருவாக்கலாம்
என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

[caption id="attachment_1995" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1996" align="aligncenter" width="250" caption="படம் 2"][/caption]

3D பற்றி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துத்
துறையைச்ச் சார்ந்தவர்களுக்கும் எளிதாக முப்பரிமானத்தில் ஒரு
படத்தையோ பொருளையோ ஆன்லைன் மூலம் எளிதாக
வடிவமைக்கலாம். எந்த மென்பொருளும் தேவையில்லை அதே போல்
புதிய கணக்கும் உருவாக்கத்தேவையில்லை சற்றே வியப்பாக
ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இணையதள முகவரி : http://www.papercritters.com/pc.php

இந்த இணையதளத்திற்க்கு சென்று Toy Creator என்ற பொத்தானை
அழுத்தி உருவாக்கலாம் இதற்க்கு படம் 1-ல் காட்டியபடி இடதுபக்கம்
இருக்கும் எந்த ஒரு வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு அந்த வடிவத்தை வைத்து நாம் 3D -ல் நமக்கு பிடித்த
வடிவத்தை உருவாக்கலாம் கூடவே எந்த கலர் வேண்டும் என்பதையும்
தப்பாக செய்துவிட்டால் அதை துடைக்க Clear மற்றும் Undo வசதியும்
உள்ளது. இதனுடன் நாம் விரும்பும் படத்தை கூட சேர்த்தும்
கொள்ளலாம். வடிவமைத்து முடிந்தவுடன் அதை நாம் Save என்ற
பொத்தானை அழுத்தி படம் 2 -ல் இருப்பது போல் சேமித்துக்கொள்ளலாம்



ஆன்லைன்-ல் நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்தும் கொள்ளலாம்.
ஏற்கனவே பலர் உருவாக்கிய 3D வடிவங்களைப்பாற்பதற்க்கு
" The colony " என்ற பொத்தனை அழுத்திப் பார்க்கலாம். கண்டிப்பாக
இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
சாப்பிடும் சாப்பாட்டுக்கு முன் ஒரு நிமிடமாவது கடவுளுக்கு
நன்றி என்று சொல்லி நாம் உணவு அருந்தினால் கடைசி
வரை நம் உடல் நலமாக இருக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.வாஸ்கோடாகாமா எந்த ஊரில் பிறந்தார் ?
2.வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் ?
3.அசைவ உணவால் ஏற்படும் நோய்களின் பெயர் என்ன ?
4.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப்படகின் பெயர் என்ன?
5.அமைதிப் பெருங்கடலின் அமைவிடம் எது ?
6.இந்தியாவின் தென்கோடி பகுதி எது ?
7.ஜூடோ எந்த நாட்டின் தற்காப்புக் கலை ?
8.ஓம்ஸ் விதியை அமைத்தவர் யார் ?
9.கற்ப்பூரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.ஹோமியோபதி எந்த நாட்டின் மருத்துவம் ?

பதில்கள்:
1.போர்சுக்கலில் சைனஸ் ,2. மார்க்கோனி, 3. ஜீனோஸிஸ்,
4.விபுதி,5.சந்திரன், சோழர்கள்,6.இந்திரா முனை, 7.ஜப்பான்,
8. ஜார்ஜ் சைமன் ஓம்ஸ் 9.பைன்,10.ஜெர்மனி

இன்று மே 10 
பெயர் : பிருட்டே கால்டிகாசு,
பிறந்த தேதி : மே 10, 1946

முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண்
ஆய்வாளர். நவீன முதனியியல் துறையில்
நன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான்
பற்றிய ஆய்வில் முதன்னையானவர் ஆவார்.
கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில்
உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில்
பேராசியராகப் பணிபுரிகிறார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. 3D தெரியாத என்னை போன்றவர்களுக்கு ஆவலை தூண்டும் தளம். அறிமுகத்திற்கு நன்றி.தாங்களின் சிந்தனையும் ஆழம்.

    ReplyDelete
  2. Please let me to Know how to block internet from PC
    one or Two Sites only can see say like
    http://winmani.wordpress.com all other web sites and blogs should be block please help

    ReplyDelete
  3. @ rifa
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. bsnl 3g paththi konjam sollunkalen

    ReplyDelete

Post Top Ad