இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, May 9, 2010

இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை

உலகஅளவில் இணையதளமுகவரி அனைத்தும் ஆங்கிலமொழி-ஐ
மையமாகக்கொண்டு தான் செயல்பட்டுவருகிறது சமீபத்தில் இனி
இணையதளங்களின் பெயர் அந்தந்த நாட்டின் மொழிகளில்
வரவிருக்கிறது என்ற செய்தி தெரிந்தது தான் இப்போது அதன்
தொடக்கமாக முதல் இணையதள முகவரியை இலத்தீன் மொழியில்
ஆரம்பித்துள்ளனர் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.இணைய உலகில் புதிய அத்தியாயம் தொடக்கம் என்று கூறினால்
தான் சரியாக இருக்கும் இண்டர்நெட்டில் இணையதளமுகவரிகளை
பதிவு செய்யும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)
புதிதாக இலத்தீன் மொழியில் அரேபி பெயரை இணையதள
முகவரியாக வைத்து சோதித்து வெற்றியும் பெற்றுள்ளது.
அவர்களுடைய மொழியில் இணையதளத்தின் பெயரை
நாம் இணைய உலாவியின் address bar- ல் கொடுத்தால் போதும்
அவர்களின் மொழியிலே யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சற்று விரிவாக பார்க்க வேண்டும் என்றால் இனி இணையதளங்களின்
முகவரி தமிழ் மொழியில் அதாவது தமிழ்நாடு.கொம் என்று
கொடுத்தால் போதும் ஆங்கில வார்த்தையை கொடுப்பதற்க்கு
பதில் தமிழ் வார்த்தையை முகவரியாக வைக்கலாம். இதன் சோதனை
முயற்ச்சியாகத்தான் இப்போது அரேபி மொழியில் வைத்துள்ளனர்.
அதன் முகவரி http://موقع.وزارة-الأتصالات.مصر/
இப்போதைக்கு இதில் ஒரு சிறிய குறை என்னவென்றால் இந்த தளத்தின்
பெயரை நாம் Mozilla Firefox 3.6.3 மற்றும் Google Chrome உலாவியில்
மட்டுமே பயன்படுத்த முடியும் இப்போதைக்கு இந்த பெயரை
IDN (International Domain Name) அங்கீகரித்துள்ளனர். விரைவில்
தமிழிலும் இணையதளப்பெயர்கள் வரும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
வின்மணி சிந்தனை
ஏமாறுபவனாக இருந்தாலும் ஏமாற்றுபவனாக
இருக்காதீர்கள் காலம் கண்டிப்பாக உரிய
தண்டனையை உரியவருக்கு கொடுக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.புறஊதாக் கதிர்களை உருவாக்கும் மூலம் எது ?  
2.உலகின் மிகப்பெரிய இரயில் நிலையம் எங்குள்ளது ?
3.நீரில் கரையாத சர்க்கரை எது ?   
4.பசு எத்தனை மாதத்தில் கன்று ஈனும் ?    
5.நாக்குப்பூச்சியின் இருப்பிடம் எது ?  
6.சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது ?   
7.வைகை அனை எந்த மாவட்டத்தில் உள்ளது ?   
8.இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி யார் ?
9.ஈராக்கின் தலைநகரம் எது ?   
10.பூவாது காய்க்கும் மரங்கள் எவை ?
 

பதில்கள்:
1.சூரியன்,2. நீயூயார்க், 3. பாலிசேக்ரைட்,4.பத்து மாதத்தில்
5.மனிதக்குடல் , சோழர்கள்,6.1869, 7.தேனி,
8. டாக்டர் இராதாகிருஷ்ணன் 9.பாக்தாத்,10.பலா,அத்தி,ஆல்

இன்று மே 9 
பெயர் : அன்னமாச்சாரியார்,
பிறந்த தேதி : மே 9, 1408

15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில்
வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர். திருப்பதி
வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய
தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர்
மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற
பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

 1. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. கசோலைகளில் எப்படி பெயர், தொகை எழுத்தாலும் எண்ணலும் பூர்த்தி செய்து நம் பிரிண்டரில் எடுப்பது. மேலும் letter head pad யில் எப்படி விவரங்களை எழுதி பிரிண்டரில் எடுப்பது

  ReplyDelete
 3. தமிழில் இணைய தள பெயர்கள் வரும் இனிய நாளை எதிர் நோக்கி உள்ளேன்.

  ReplyDelete
 4. @ Rajasurian
  கண்டிப்பாக விரைவில் வரும் நாமும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. @ mohamed khaiyum
  மைக்ரோசாப்ட் வேர்டு -ல் எளிதாக செய்யலாம் ஏற்கனவே அதில் Template என்பதில் இந்த letter head உருவாக்குவதற்க்கு எளிதான வழிமுறை உள்ளது. முயற்ச்சித்துப்பாருங்கள்.

  ReplyDelete
 6. @ கிரி
  நன்றி

  ReplyDelete
 7. நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்,
  சில கணினி நுணுக்கங்களை பற்றி எழுதலாமே?எடுத்துக்காட்டிற்கு கணினியின் பைல்ஸ் பற்றி சொல்லலாம்.
  நன்றி,
  விண்மணி.

  ReplyDelete
 8. @ chutti
  மிக்க ந-ன்றி , விரைவில் தொடங்கலாம்.

  ReplyDelete

Post Top Ad