கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, May 4, 2010

கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ

கூகுளின் அடுத்த தலைமுறைக்கான 3D டெஸ்க்டாப் அறிமுகம்
மற்றும் இதைப் பற்றிய சிறப்பு வீடியோவைப்பற்றித்தான் இந்த பதிவு.



கூகுளின் அதிவேக வளர்ச்சிக்கு முன் வேறுயாரும் அருகில் கூட
நிற்க்க முடியாது என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறது இதன்
வேகம் மட்டுமல்ல விவேகமும் தான் இதன் அசுர வளர்ச்சிக்கு
காரணம் என்று கூறினாலும் அது மிகையாகாது. கூகுளின்
அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் இந்த கூகுள் டெஸ்க்டாப்  3D
டெக்னாலஜி விண்டோஸ் மட்டுமல்ல மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும்
இதுவரை இல்லாதவாறு அனைத்து டெஸ்க்டாப் அப்ளிகேசனும்
3D -யில் காட்டி வியக்கவைக்கின்றனர் அதுமட்டுமின்றி
டெஸ்க்டாப்-ல் அப்ளிக்கேசன் ஐகானை வைத்து மிகப்பெரிய
விளையாட்டை நம் கண்முன் காட்டி அசத்தியுள்ளனர் டெஸ்க்டாப்-ல்
உள்ள ஐகானை சுவற்றில் மாற்றி தொங்கவிடுவதுபோல் தொங்க
விடலாம் அதோடு படங்களை பார்க்கவும் 3D யில் காட்டி
அசத்துகின்றனர். இதைப் பற்றிய சிறப்பு அறிமுக வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.






வின்மணி சிந்தனை
பணத்துக்காக யாருக்கும் தீயதுக்கு துனை போகக்கூடாது
ஏனென்றால் நாம் பாரதத்தாயின் மக்கள் தர்மமும் சத்தியமும்
தான் நம் உயிர் மூச்சு.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவில் எந்த நகரை பூங்கா நகர் என்று அழைக்கிறோம் ?
2.கிரிக்கெட்டில் சிக்சர் எந்த ஆண்டு அறிமுகம் ஆனது ?
3.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும் ?
4.காற்று நகரம் என்று எதை அழைக்கின்றோம் ?
5. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
6.உலகின் இரண்டாவது பெரிய நாடு எது ?
7.முதல் இஸ்லாமிய குடியரசு நாடு எது ?
8.காந்தியை முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் ?
9.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய நாடு எது ?
10.உலகின் முதல் குடியரசு நாடு எது ?

பதில்கள்:
1.பெங்களுர்2.1910 ஆம் ஆண்டு, 3.26 மைல்,4. சிக்காக்கோ
5.410 மொழிகள்,6.கனடா ,7.பாகிஸ்தான், 8. நேதாஜி
9.ரோம்,10.ஸ்பார்ட்டா

இன்று மே 4 
பெயர் : திப்பு சுல்தான்,
மறைந்த தேதி : மே 4, 1799

மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர்.
ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான
ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின்
மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட
திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம்
ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான்
சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும்
பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. Nice post Brilliant... There's no one to beat google in imagination..

    ReplyDelete
  2. @ abarajithan
    நன்றி

    ReplyDelete
  3. பிற தாயின் மக்கள் என்றால் பணத்திற்காகத் தீயவற்றிற்குத் துணை போகலாமா? சிந்தனையும் நீதியும் பொதுவானவையாக இருக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete
  4. @ Ilakkuvanar Thiruvalluvan
    எல்லா நாட்டுமக்களும் பணத்துக்காக தீயதுக்கு துனை போகக்கூடாது சரி தான். ஆனால் சிறு குழந்தைகளைக்கூட பணத்துக்காக வெறித்தனமாக சுட்டு கொல்கின்றனரே
    இந்த தீயதுக்கு துணை போகாத அனைத்து நாட்டு மக்களும் பாரதமாதாவின் குழந்தைகள்
    தான் இதில் பிரித்து சொல்ல ஏதும் இல்லை அதனால் தான்.
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad