பேரால் பார்க்கப்படும் மற்றும் ரீடுவீட் செய்யப்படும் டிவிட் என்பதின்
அடிப்படையில் யாருடைய டிவிட்டரின் மதிப்பையும் எப்படி அறியலாம்
என்பதைப்பற்றித் தான் இந்த பதிவு.
[caption id="attachment_1897" align="aligncenter" width="409" caption="படம் 1"]

[caption id="attachment_1898" align="aligncenter" width="450" caption="படம் 2"]

டிவிட்டரில் இருக்கும் யாருடைய டிவிட்டரின் தரத்தை மிக மிக
துல்லியமாக அதுவும் அதிகமான டிவிட் தினமும் பிரபலம் மற்றும்
ரீடிவிட் என்பதின் அடிப்படையில் எளிதாக கண்டுபிடிக்கலாம்
http://followcost.com இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம்
யாருடைய டிவிட்டரின் மதிப்பை வேண்டுமானாலும் எளிதாக
அறியலாம் அதுவும் சில நிமிடங்களில் இதற்க்காக நாம் எந்த
கணக்கும் உருவாக்கத் தேவையில்லை இந்த தளத்திற்க்கு சென்று
நாம் படம் 1 -ல் காட்டிய யாருடைய டிவிட்டரின் மதிப்பை தெரிந்து
கொள்ள வேண்டுமோ அவரின் டிவிட்டர் முகவரியை கொடுத்து
Enter பொத்தானை தட்டவேண்டும் அவ்வளவுதான் சில நொடிகளில்
நமக்கு முடிவு காட்டப்பட்டுவிடும் உதாரணமாக நாம் நம் வின்மணி
டிவிட்டரின் முகவரியை கொடுத்து முடிவை படம் 2ல்
காட்டியுள்ளோம்.
வின்மணி சிந்தனை
நல்லதையே மட்டும் செய்ய நினையுங்கள் அதையே சொல்லுங்கள்
யார் நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் கவலைப்படாதீர்கள் காலம்
கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லும் நாம் யார் என்று காட்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
3.இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
4.ஓமன் தலைநகரம் எது ?
5.சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
7.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
8.காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
9.பொற்கோவில் நகரம் எது ?
10.அமிலங்களின் சுவை என்ன ?
பதில்கள்:
1.கெப்ளர்,2.நூர்ஜஹான், 3.1860-ல்,4. மஸ்கட்
5.15 ஆண்டுகள்,6.கோமுகம் ,7.தாய்லாந்து, 8. ராம்
9.அமிர்தசரஸ்,10.புளிப்பு
இன்று மே 3
பெயர் : சுஜாதா ,
பிறந்த தேதி : மே 3, 1935
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

ur blog is really useful to all the computer related persons.keep it up.
ReplyDeletedid you know how to extract rar file in online?
@ sakthikumar
ReplyDeleteநண்பருக்கு,
ஆன்லைன் -ல் இலவசமாக Rar கோப்புகளை மாற்றுவதற்க்கு ஒரு இணையதளம் இருக்கிறது ஆனால் தற்போது இதன் அப்டேசன் பணியால் இதில்
சிறு பிழை வருகிறது சிறிது நாட்களில் சரியாகிவிடலாம் பயன்படுத்தி பாருங்கள் இணையதள முகவரி : http://www.wobzip.org மேலும் பல இணையதளங்கள் இருந்தாலும் அவர்கள் காசு வசூலிக்கின்றனர்.
நன்றி.