100 மில்லியன் மக்கள் ஒபேரா இணைய உலாவி சாதனை - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, April 14, 2010

100 மில்லியன் மக்கள் ஒபேரா இணைய உலாவி சாதனை

ஒபேரா இணைய உலாவி உலகெங்கும் உள்ள பல வாடிக்கையாளர்களை
பெற்று இன்று 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஒரு சிறந்த
உலாவியாக பயன்படுத்தப்படுகிறது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.



இணைய உலாவி என்றதும் நாம் உடனடியாக சொல்வது பயர்பாக்ஸ்,
இண்டர்நெட் எக்ஸ்பிளோரர், கூகுள் குரோம்  மற்றும் ஒபேரா ஆனால்
பிரச்சினை இல்லாத வேகமான இணைய உலாவி என்று பல மக்களால
தேர்ந்தெடுக்கப்பட்ட பயர்பாக்ஸ் -ஐ விட 100 மில்லியன் மக்கள்
பயன்படுத்தும் ஒரு இணைய உலாவியாக இன்று ஒபேரா வந்திருக்கிறது
என்றால் அது அதன் கடின உழைப்பைத் தான் காட்டுகிறது. பயர்பாக்ஸ்-ல்
சில இணையதளங்களுக்கு சென்றதும் அது தானாகவே மூடிவிடும்
ஆனால் இந்த பிரச்சினை தற்போது வெளிவந்துள்ள ஒபேராவில் இல்லை
அதுமட்டுமின்றி ஒபேராவின் மினி இணைய உலாவி இன்று அனைத்து
மொபைல்களையும் ஆக்கிரமித்துள்ளது. பயன்பாடு சிறப்பாக இருந்த
காரணத்தால் இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு சிறந்த இணைய
உலாவியாக மக்களிடம்  இலவசமாக தன் சேவையை அளிக்கிறது.
வின்மணி சிந்தனை
மக்களுக்கு உண்மையான சேவை செய்ய நினைக்கும் யாரும் தன்
பெருமைக்காக செய்யவில்லை மாறாக மக்களின் மேல் உள்ள
உண்மையான அன்பினால் தான் சேவை செய்கின்றனர்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி எது ?  
2. பச்சையம் இல்லாத தாவரம் எது ?  
3. மேட்டூர் அனையின் வேறு பெயர் என்ன ?  
4. மனித உரிமைதினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?  
5. ரேடியோ அலைகளின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ ?  
6. ஏரி மாவட்டம் என்பது எது ?  
7. ஜெய்ஹிந்த் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?  
8. ஒரு தீக்கோழியின் முட்டை எத்தனை கோழி
முட்டைகளுக்குச் சமம் ?  
9. கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது ?    
10. மிக உயரமான எரிமலை எது ?  

பதில்கள்:
1.சீன மொழி,2.காளான், 3.ஸ்டான்லி அனை,
4.டிசம்பர் 10,5.3 இலட்சம்,6.செங்கல்பட்டு
7.முண்டக உபநிடதம்,8.30 கோழிமுட்டைகளுக்கு சமம்,
9.கும்பகோணம்,10. கேடபாக்சி

இன்று ஏப்ரல் 14 
பெயர் : இரமண மகரிஷி
மறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு
அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ்
பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம்
இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
உங்களால் இந்தியாவுக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. ஒபரா உலவி மொபைல் போனுக்கு மிக உதவியாய் இருக்கிறது உண்மைதான்.
    தகவலுக்கு நன்றி

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  2. Opera browser 10.53 is really good for computers also. I am using that browser for about a year now. The latest version is amazingly fast and convenient that firefox and chrome. Give a try for that browser. I really do not why they are not advertising that much. I am sure that it is even faster than chrome. i have tired all these browsers like firefox, chrome, safari and IE.

    ReplyDelete
  3. @ raja
    சரிதான் நாமும் ஒபேரா தான் பயன்படுத்துகிறோம்.
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad