பளு தூக்கும் ரோபோ மனிதனை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது
பளு தூக்கும் ரோபோ மனிதனைப்பற்றிய சிறப்பு பதிவு படங்களுடன்.




படங்கள் நன்றி நாசா ஸ்லேஸ்டாட்
விண்வெளியில் சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக சில பேர்
விண்வெளிக்கு சென்று குறையை சரிசெய்ய வேண்டியிருக்கிறது
இதற்கு ஆகும் செலவு மட்டுமல்ல நீண்ட காலம் அங்கு தங்கி
இருந்து சில பிரச்சினைகளை சரி செய்யாமலே வந்துவிடுகின்றனர்.
உணவு, காலநிலை என பலவற்றால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
இந்த பெரும் பிரச்சினைக்கு தீர்வாக பிரேத்யேகமான சிறப்பு பளு
தூக்கும் ரோபோ ஒன்றை நாசா ஜெனரல் மோட்டார் நிறுவனத்தினர்
வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு மனிதன் போலவே இருக்கும் இந்த
ரோபோ அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ரோபோனௌட் 2 ( R2).
விண்வெளியில் ஏற்படும் கோளாறை பூமியில் இருந்து கொண்டே
இந்த பளு தூக்கும் ரோபோவின் உதவியுடன் ரிமோட் மூலம்
கட்டளைகள் கொடுத்து சரி செய்யலாம் என்கின்றனர். இந்த வருடம்
செப்டம்பர் மாதத்தில் இந்த ரோபோ விண்வெளிக்கு செல்லும் என்று
எதிர்பார்க்கபடுகிறது. மனிதன் வேலை செய்யும் விதம் போல் தான்
இதன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது ரோபோ மனிதனின் சிறப்பு
படங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை
பிறரை புறங்கூறி , பொய் சொல்லி பணம் சம்பாதிப்தைவிட
உண்மையை (சத்தியத்தை) பேசி ஏழையாக இருப்பது
எவ்வளவோ மேல்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. விண்வெளி ஆய்வுக்கென்று பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட
கம்ப்யூட்டர் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
2. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பியின் பெயர் என்ன ?
3. பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ?
4. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த நாடு எது ?
5. இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது ?
6. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
7. ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
8. எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
9. குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?
10. இலங்கையின் முக்கிய கோடைவாசல் தலம் எது ?
பதில்கள்:
1.1962, 2.கல்லீரல், 3.அண்டார்டிக்கா, 4.ஜெர்மனி,
5.தேக்கு மரம்,6.திப்புசுல்தான், 7.டயட்,
8.இரும்புச்சத்து, 9.பிட்யூட்டரி,10. நுவரேலியா
இன்று ஏப்ரல் 15
பெயர் : லியொனார்டோ டாவின்சி
பிறந்த தேதி : ஏப்ரல் 15, 1452
ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும்
ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி
விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa)
போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:
Post a Comment