நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பல இணையதளங்கள் சென்று தமிழ் செய்திகள் பார்ப்தற்கு ஆகும்
நேரத்தை குறைப்பதற்க்காக ஒரு இணையதளம் வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
தமிழ் செய்திகள் படிப்பதென்றால் பல பத்திரிகைகளின்
இணையதளங்களுக்குச் சென்று தான் நாம் படிக்க வேண்டும்
சில பத்திரிகை இணையதளங்களுக்கு சென்றால் அதன்
தோன்றும் நேரம் ( Loading Time) அதிகமாக இருக்கும்.
இப்படி பல இணையதளங்களுக்கு சென்று செய்திகளைப்
பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சலிப்பு வந்துவிடும்.
முக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க புதிதாக ஒரு
இணையதளம் வந்துள்ளது. தினமலர் பத்திரிகையில் இருந்து
கூகுளின் தமிழ் செய்திகள் வரை அத்தனையும் உடனுக்குடன்
நேரடியாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தெரிந்து
கொள்ளலாம். தமிழ் உள்ளங்களைத் திருடும் இதன்
இணையதள முகவரி: http://www.thiruda.com
வின்மணி சிந்தனை
அனைத்து மக்களின் நலம் விரும்பி கடவுளை வணங்கினால்
நம் நலனை கடவுள் பார்த்துக்கொள்வார். எல்லாம் இறைவன்
திருவருளால் நல்லதாகவே நடக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ?
2. உலகச் சுற்றுச்சுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
3. ஒட்டகப்பறவை என்று எதை கூறுவார்கள் ?
4. ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
5. கப்பல் பயணத்தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?
6. உடம்பிலுள்ள எலும்புகளில் மிக நீளமான எலும்பு எது ?
7. உலகில் தோன்றிய முதல் தாவரங்கள் எவை ?
8. நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு ?
9. உலகில் அதிகம் இரப்பர் கிடைக்கும் நாடு எது ?
10. உலகில் எத்தனை மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ?
பதில்கள்:
1.அலெக்ஸாண்டர்,2.ஜீன் 5, 3.நெருப்பு கோழி,
4.பின்லாந்து,5.நாட்டிகல்,6.தொடை எலும்பு
7.நீலப்பச்சைப் பாசி,8.நாற்பத்தி இரண்டு,9.மலேசியா,
10. 975 மில்லியன் மக்கள்
இன்று ஏப்ரல் 13
பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 13, 1930
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை
சீர்திருத்த முயன்ற உங்களுக்கு நன்றி.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
அன்புடையீர்.
ReplyDeleteநாற்பத்து இரண்டு எனக் குறிப்பிடவும். அல்லது நாற்பத்திரண்டு எனக் குறிக்கவும்.
சீன மொழி பேசுவோர எண்ணிக்கை பழைய கணக்கு. இவ்வாறு பழைய கணக்கைக் குறிப்பிடுகையில் அடைப்பிற்குள் ஆண்டைக் குறிப்பிடவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
very useful
ReplyDeletethank u so much!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteuseful news.
ReplyDeleteok good action
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி .விண்மணி அவர்களே !
ReplyDeleteமுரளி , ஆஸ்திரேலியா
@ murali நன்றி
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கl
ReplyDelete@ aliakbar நன்றி
ReplyDeletevery fine.
ReplyDeleteஆஹா ...பிரமாதம் எல்லா தமிழ் செய்தியும் ஒரே இடத்தில. ரொம்ப ரொம்ப நன்றி சார்
ReplyDeleteஇளமுருகன்
நைஜீரியா
@ Elamurugan மிக்க நன்றி
ReplyDeleteReally it's a nedded information
ReplyDelete@ Saravanaa நன்றி
ReplyDeleteமிகவும் நன்று. ஆனால் சிறிய வருத்தம். தமிழில் இத்தகு செய்திகளை ஒரே இடத்தில் படிப்தற்கு முதலில் ஆரம்பிக்கபட்ட இணையதளம் தகவல் இன்போ. இதனை வலிதொடர்ந்தே திருடா.காம் ஆரம்பித்துள்ளனர். பெயருக்கேற்றார் போல தகவல் இன்போ வில் கிடைக்கும் இணையதளம் இணைப்புக்கள் அனைத்தையும் அச்சு மாறாமல் திருடா திருடியுள்ளது என்பது வருத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது வலைபூவினையும் திருடாவில் அரிந்தோ அறியாமலோ கொடுத்துள்ளனர். ஆனால் நாமும் வளர்வோம் வளர்வோரையும் கைகொடுப்போம் இது தான் எங்கள் சித்தம். நன்றிகள் !!!
ReplyDeleteதகவல் இன்போவின் [www.thakaval.info] பிற சேவைகள் தகவல் வலைப்பூக்கள் [www.thakaval.info/blogs], இந்திய செய்திகள் [www.alltops.in], இலங்கை செய்திகள் [www.lankatop.com]..... மனமிருந்தால் இதனை பற்றியும் நீங்கள் எழுதாலாம், பலருக்கு பயன்படும் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் சித்தம்........
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி
ReplyDelete@ A.R.M.Haleem
ReplyDeleteமிக்க நன்றி