நாம் வாழ்த்துக்கள் பலவற்றை இமெயில் மூலமும் குறுஞ்செய்தி
மூலமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் நம் தமிழ் வருடத்தின்
சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினத்தை மறந்து
விடுகிறோம். இனி நாம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும்
மகிழ்ச்சியையும் உலகெங்கும் வாழும் நம் தமிழ் சகோதர
சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்வோம்.
வரும் ஸ்ரீ விக்ருதி ஆண்டில் அனைத்து தமிழ்
மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டுஉங்கள் வாழ்வில்
மகிழ்ச்சியும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற
செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று அனைத்து
தமிழ் மக்களும் வளம்பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
பிறக்கும் விக்ருதி ஆண்டு எல்லா மக்களுக்கும்
அன்பையும் சந்தோஷத்தையும் வாரி வழங்கும்
ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்.
சித்திரைத் திருநாள் முதல்நாள் வாழ்த்துக்களை அனைத்து
தமிழ் நண்பர்களுக்கும் அனுப்பி நம் அன்பை தெரியப்படுத்துவோம்.
வின்மணி இன்றைய சிந்தனை
மக்களுக்கு பயன்படும் பல நல்ல திட்டங்களை ஆதரிக்கத்தான்
நம்பிக்கையுடன் சட்டசபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து
அனுப்பி வைக்கின்றனர். ஆனால் சில பேர் சட்டசபைக்கு வருவதே
இல்லை , உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா ?
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. குதிக்கத் தெரியாத மிருகம் எது ?
2. இந்திய நாட்டின் முதல் கற்கோவில் எது ?
3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4. வெள்ளை யானை எந்த நாட்டில் காணப்படுகிறது ?
5. இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
6. எளிமையான அமினோ அமிலம் எது ?
7.சனியின் பெரிய கோள் எது ?
8. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம் எது ?
9. ரஞ்சி கோப்பைக்கான போட்டி தொடங்கிய ஆண்டு ?
10. இரண்டு இடைவேளைகளை கொண்ட படம் எது ?
பதில்கள்:
1.யானை,2.காஞ்சி கைலாசநாதர் கோவில்,3. இந்தியா,
4.தாய்லாந்து,5.பீட்டர் கோல்ட்மார்க்,6.கிளைசின்
7.டைட்டான்,8.பிக்பென் - இங்கிலாந்து,9.1934,
10.சங்கம்
இன்று ஏப்ரல் 12
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945
32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை
நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு
தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்
தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார
நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்
நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று
முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வாழ்த்துக்கள் வின்மணி ,
ReplyDeleteஉங்கள் தமிழ் பற்றுக்கு எங்கள் அன்பும் ஆதரவும்
கிருஷ்ணமூர்த்தி
கனடா
தமிழ் சேவைக்கு நன்றி , நானும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டேன்.
ReplyDeleteகோவை குமார்
@ கிருஷ்ணமூர்த்தி நன்றி
ReplyDeletethanks , wish you the same...
ReplyDelete@ கோவை குமார் நன்றி
ReplyDelete//ஆனால் நம் தமிழ் வருடத்தின்
ReplyDeleteசித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினத்தை மறந்து
விடுகிறோம். //
அப்படியா? புதிய தகவல்.!!! :)
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவளர்க உங்கள் தமிழ் பணி
வாழ்த்துகள்
இளமுருகன்
நைஜீரியா.
@ கபீஷ் நன்றி
ReplyDelete@ Elamurugan நன்றி
ReplyDeleteஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@ fairy நன்றி
ReplyDeleteஉங்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகிருஷ்ண்மூர்த்தி
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் அறிஞர்களின் வே்ண்டுகோளை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திய பின்பும் சி்த்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவிப்பது ஏன்?
ReplyDeleteகிறித்துவ ஆண்டின் தொடக்கம் சனவரி முதல் நாளுக்கு மாறிய பின்பும் ஏப்பிரல் முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்றனர். அது போல் சித்திரை முட்டாள்களை உருவாக்க எண்ணுகிறீர்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
@ Ilakkuvanar Thiruvalluvan
ReplyDeleteதை முதல் நாள் தமிழ்புத்தாண்டு சரி தான் , ஆண்டாண்டு காலமாக சித்திரை முதல் நாளை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடிவிட்டு
இன்று மட்டும் வெறுமையாக விட்டு விட மனம் இல்லை அதனால் தான். தமிழ் வருடப்பிறப்பை இரண்டு நாள் கொண்டாட கூட
நமக்கு விருப்பம் இல்லையா ?
நன்றி
@ Geetha
ReplyDeleteநன்றி
தமிழ் ஆண்டுப் பிறப்பை எத்தனை நாட்களும் கொண்டாடலாம். ஆனால், வெவ்வேறு நாட்களைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடாது அல்லவா?
ReplyDeleteசித்திரை முழு நிலவு நாளைத் தொல்காப்பியர் நாளாக (கி.மு.711) அறிஞர்கள் அறிவிததுள்ளனர். எனவே, நாம் சித்திரை நாளைத் தொல்காப்பியர் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
@ Ilakkuvanar Thiruvalluvan நன்றி
ReplyDelete