உங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, February 6, 2010

உங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம்

நம் இணையதள நண்பர்கள் பல பேர் ஐபாட் சில நேரங்களில் ஜார்ச்
ஆகவில்லை, பாடல் ஒடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில்
தானாகவே ஆப் (OFF) ஆகிவிடுகிறது என்ற பல கேள்விகளை
கேட்டிருந்தனர் இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு நமக்கு அனுபவம்
இல்லை இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காகவே முத்தான மூன்று
இணையதளங்கள் உள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.
உங்கள் ஐபாட்-ன் சின்ன பிரச்சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள்
வரை அத்தனையையும் நீங்களே சரிசெய்ய தான் இந்த இணையதளம்
இருக்கிறது.
முதல் இணையதளம் : http://www.ifixit.com/Guide

எந்த விளம்பரமும் இல்லை சேவை ஒன்றை மையமாகக்கொண்டு
செயல்பட்டு வருகிறது. நமக்கு ஐபாட் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால்
கூட அவர்களே படத்துடன் எப்படி திறப்பதிலிருந்து அதை சரி செய்வது
வரை அத்தனையையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல்
கொடுக்கின்றனர்.ஒருவேளை நமக்கு அவர்கள் சொல்லுவது
புரியவில்லை என்றால் அவர்களிடம் கேள்வி கேட்கலாம்.எப்படி
கேள்வி கேட்பது என்று தெரியவில்லையா அதே இணையதளத்தில்
“Answers" என்ற பக்கம் ஒன்று உள்ளது இதற்கு முன்னால் கேட்ட
கேள்விகள் அனைத்தும் இங்கு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும்
தளத்தின் வலதுபக்கத்தின் மேல் இருக்கும் "ASK Question" என்பதை
சொடுக்கி உங்கள் கேள்விகளை பதிவு செய்யலாம்.

இரண்டாவது இணையதளம்: www.ipodrepair.com/ipodrepairguides.htm
இதில் எப்படி ரிப்பேர் செய்வது என்று வீடியோவுடன் சொல்கிறார்கள்

மூன்றாவது இணையதளம்: http://ipodhowtovideo.com

இந்த தளத்தில் ஐபாட் என்றால் என்ன என்று அடிப்படையிலிருந்தே
சொல்கின்றனர். ஐபாட்-ஐ ஒவ்வொரு ஜென்ரேசன் வாரியாக பிரித்து
நமக்கு சொல்லி கொடுக்கின்றனர். ஐபாட் ரிப்பேரை சரி செய்வது
பற்றி ஆர்வம் உள்ள நம் நண்பர்களுக்கும் இந்த தளம் உதவியாக
இருக்கும். கண்டிப்பாக இந்த மூன்று தளங்களும் உங்களுக்கு பயன்
உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
File-ன் கடைசி வரியை எடுக்க உதவும் ஜாவா நிரல்
import java.io.BufferedReader;
import java.io.FileInputStream;
import java.io.InputStreamReader;
public class ReadLastLine
{
public static void main(String[] args) throws Exception
{
FileInputStream in = new FileInputStream("file.txt");
BufferedReader br = new BufferedReader
(new InputStreamReader(in));
String strLine = null, tmp;
while ((tmp = br.readLine()) != null)
{
strLine = tmp;
}
String lastLine = strLine;
System.out.println(lastLine);
in.close();
} }

இன்று பிப்ரவரி 7 
பெயர் : தேவநேயப் பாவாணர்,
மறைந்த தேதி : பிப்ரவரி 7, 1902
மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி
வல்லுனரும் ஆவார்.40க்கும் மேலான
மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய
சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.
இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும்
கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று
அழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப்
பாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.

1 comment:

  1. தாமஸ் ரூபன்February 6, 2010 at 10:08 PM

    பல பயனுள்ள தகவல்களை தருகின்ற உங்களுக்கு நன்றிகள் பல பல அய்யா.

    ReplyDelete

Post Top Ad