குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, January 26, 2010

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்.

குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு. சிறிய வயது உள்ள
குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும்
பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்  உள்ளது.
முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும்
பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர்
கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.

* Intel Pentium Dual Core E5200 CPU

* 19”inch touchscreen LCD

* 500GB HDD

* 4GB RAM

* DVD super drive

* Intel GMA 3100 3D Graphic Card

* Realtek HD audiO

* Windows 7 OS

இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன்
(Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர்.
தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில்
இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை
அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில்
ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும்
கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும்
வடிவமைத்துள்ளனர்.இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக்
கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர்
இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள்
பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5
முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த
கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15
வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான
பேக்கேஸும் உள்ளது.இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப்
கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை
$1999 அமெரிக்க டாலர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவா ஸ்கிரிப்ட்டில் டைம் அவுட் செய்வதற்கான
எளிய நிரல்

setTimeout(“inittab1();“, 500);
setTimeout(“inittab2();“, 1000);
setTimeout(“inittab3();“, 2000);
setTimeout(“initontology();“, 6000);

இன்று ஜனவரி 27
பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன்
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும்
ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை
உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான
வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று
தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு
சொந்தகாரர்.தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு
செய்துள்ளார் எடிசன்.

2 comments:

  1. வாங்க ஆசைதான்,ஆனால் விலைதான் பயமுறுத்துகிறது.நல்ல தகவல் நன்றி.

    ReplyDelete
  2. திருவட்டாறு சிந்துகுமார்February 18, 2010 at 8:27 PM

    விலை குறைவாக இருந்தால் எல்லோரும் வாங்குவார்கள். விலை குறைந்து மார்க்கெட்டுக்கு இந்த கம்ப்யூட்டர் வருமானால் பெற்றோர்களை வேலை செய்ய விடாமல் கம்யூட்டரில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக இந்த வகை கம்யூட்டர்களை வாங்கிக்கொடுப்பர். எதற்கும் விலை குறைகிறதா என்று பார்ப்போம்.

    திருவட்டாறு சிந்துகுமார்

    ReplyDelete

Post Top Ad