டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, January 25, 2010

டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

உலக பணக்காரர்களில் முதல்வர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிவிட்டரில்
சேர்ந்தது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் டிவிட்டரிலும்
சாதனை படைக்காமால் வெளிவருவாரா பில்கேட்ஸ் ஆம் பில்கேட்ஸ்
டிவிட்டரில் இணைந்த 8 மணி நேரத்திற்க்குள் 1 இலட்சம் பேர்
அவரை பின் தொடர்ந்துள்ளனர். டிவிட்டரின் வரலாற்றிலே இதுதான்
முதல் முறை உலகத்தின் அத்தனை நாடுகளில் இருந்தும் பில்கேட்ஸ்
நண்பர்கள் ,விசுவாசிகள் , என டிவிட்டரை நோக்கி
படையெடுத்துள்ளனர். அதிக அளவு பயனாளர்கள் ஒரே நேரத்தில்
பில்கேட்ஸ்-ஐ பின்தொடர டிவிட்டருக்கு வழக்கமான சந்தேகம் தான்
ஏதோ வைரஸ் தாக்குதலா ? ஒரே நேரத்தில் இவ்வளவு டிராபிக்
வருகிறதே என்று புரியாமல் பில்கேட்ஸ்-ன் அக்கவுண்டை வெரிபை
பண்ணி பில்கேட்ஸ் உள்ளே வந்ததால் தான் டிராபிக் கொஞ்சம்
அதிகமாகிவிட்டது என்று அறிவித்தனர். பல ஆயிரக்கணக்கான
மக்கள் பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்ததில் இருந்து இந்த நிமிடம்
வரை பில்கேட்ஸ்-ஐ பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்த்து பற்றி டிவிட்டரின்
மேலதிகாரிகளிடம் கேட்டபோது பில்கேட்ஸ் எங்கள் டிவிட்டருக்கு
வந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி தான். அதோடு தனிப்பட்ட
எங்கள் வாழ்த்துச் செய்தியையும் பில்கேட்ஸ்க்கு அனுப்பியுள்ளோம்
என்று கூறினர். பில்கேட்ஸ்-ம் 42 பேரை பின் தொடர்கிறார்.
இந்த நிமிடம் வரை பில்கேட்ஸ் 16 டிவிட் செய்துள்ளார் அவரை
பின்தொடர்ந்து 3,36,614 பேர் உள்ளனர். சராசரியாக ஒருமணி
நேரத்திற்கு 12,500 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த மாததின் முடிவில் இது 4 இலட்சத்தை தாண்டும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பணக்காரருடன் நாமும் தொடர்பு
வைத்துக் கொள்ள விரும்பினால் கீழ்கண்ட டிவிட்டர் முகவரியை
சொடுக்கவும்.

பில்கேட்ஸ்-ன் டிவிட்டர் முகவரி :
http://twitter.com/billgates
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
மவுஸ் பொஸிஸனை கண்டுபிடிக்க உதவும் நிரல்
function rPosition(elementID, mouseX, mouseY) {
var offset = $('#'+elementID).offset();
var x = mouseX - offset.left;
var y = mouseY - offset.top;
return {'x': x, 'y': y};
}

இன்று ஜனவரி 26
மதிப்பிற்குரிய இந்திய திருநாட்டின் 61 வது
குடியரசு தினம். வளரும் வல்லரசு நாடுகளில்
இந்தியாவுக்கு எப்போதுமே முதலிடம் தான்.
இந்திய தேசத்துக்காக பாடுபட்ட அத்தனை
தலைவர்களையும் நன்றியுடனும்
மகிழ்ச்சியுடனும் நினைத்து பார்க்கிறோம். உங்கள் தேசப்பற்றுக்கு
நன்றிகள் பல உங்களை என்றும் எங்கள் பாரத நாடு நினைவில்
வைத்திருக்கும்.

1 comment:

  1. நம் தாய் திருநாட்டின் 61-வது குடியரசு தின வாழ்த்துகள்.

    ReplyDelete

Post Top Ad