கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, January 24, 2010

கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.

தேடுதல் என்றாலே கூகுள் தான் என்றாகிவிட்ட இந்த நிலையில்
கூகுளில் புதுமையாக மிகச்சரியான முடிவுகளை இப்போது
கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர் இதைப்பற்றி தான் இந்த
பதிவு. மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுதலில் தாங்கள் தான்
சரியான முடிவுகளை கொடுப்போம் என்று கொஞ்ச நாளாக
பெருமையாக கூறிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது
கூகுள் தன் அடுத்தகட்ட போட்டிக்கு ஆளே இல்லாமல்
செய்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது.
பிங் தேடுபொறி இப்போது கூகுளின் அடுத்த கட்ட நடவடிக்கை
பார்த்து வியந்துள்ளது.




கூகுள் தேடுதலில் புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்றால்

மிகச்சரியான முடிவுகளை உடனடியாக கொடுப்பது தான். எப்படி

இதை சோதிப்பது என்ற எண்ணத்தில் நாம் தாஜ்மகாலின் உயரம்

என்ன என்று கூகுள் தேடுதலில் கொடுத்தோம் தேடுதல் முடிவில்

நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது ஆம் தாஜ்மகாலின்

உயரத்தை தேடுதலின் முடிவிலே காட்டிவிட்டனர் எந்த

இணையதளத்திற்கும் செல்லாமல் மிகச்சரியாக முடிவுகளை

கொடுத்து விட்டது கூகுள். அடுத்து இந்தியாவின் பிரதமமந்திரி

என்ற தேடுதலுக்கும் மன்மோகன் சிங் என்ற பெயரை முதல்

முடிவிலே சரியாக கொடுத்தது. இதில் என்ன புதுமை என்று

கேட்கிறீர்களா முன்பெல்லாம் இதே இந்தியாவின் பிரதமமந்திரி யார்

என்று கேட்டால் பழைய பிரதமமந்திரிகளின் பெயர்களை தான் முதலில்

கூகுள் கொடுக்கும் இப்போது கூகுளில் எல்லாமே லைவ் ஆகிவிட்டது.

நாம் என்ன தேடுகிறோமோ அதை சரியாக புரிந்து கொண்டு முடிவுகளை

துல்லியமாக காட்டுகிறது. விரைவில் இன்னும் பல ஆச்சர்யங்களை

நாம் கூகுளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML  file-ஐ உள்ளீடு செய்வதற்காக எளிய ஜாவா நிரல்
function parseXml(xml) {
  //find every Tutorial and print the author
  $(xml).find("Tutorial").each(function()
  {
    $("#output").append($(this).attr("author") + "");
  });
}


இன்று ஜனவரி 25
பெயர் : குமார சுவாமிப்புலவர்,
மறைந்த தேதி : ஜனவரி 25, 1922
இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ்
இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு
செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.சாணக்கிய நீதி
வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்ற
வடமொழி நூல்களை மொழிபெயர்த்தவர்.
சிறந்த இறைபக்தி உள்ளவர் பண்பாளர்.

 

7 comments:

  1. சூடான செய்தி
    உபயோகமான தகவல்
    அதுதான் 'விண்மணி'

    ReplyDelete
  2. சூப்பர்

    கூகுள் கூகுள்தான்

    ReplyDelete
  3. உங்கள் விண்மணியை இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்து பதிலிடுகிறேன்.
    நன்றி.
    அன்புடன்
    திருவட்டாறு சிந்துகுமார்,

    ReplyDelete
  4. நன்றி குமார்.

    ReplyDelete

Post Top Ad