Winmani: சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Showing posts with label சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.. Show all posts
Showing posts with label சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.. Show all posts

Sunday, March 7, 2010

சில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம்.

3:04 PM 1
ஆன்லைன் -ல் ரெஸ்யும் உருவாக்கலாம் என்பதெல்லாம்
பழசாகிவிட்டது போல இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக
நாம் குவிஸ் உருவாக்கலாம் இதைப் பற்றி தான் இந்த பதிவு.



ஜாவா ஸ்கிரிப்ட் ஐ பயன்படுத்தி நாம் எளிதாக குவிஸ்
உருவாக்கலாம். வழக்கமாக குவிஸ் உருவாக்க அதிகநேரம்
எடுத்து கொள்ளும் ஆனால் இந்த குவிஸ் ஆன்லைன்-ல் சில
நிமிடங்களில் யார் துணையும் இல்லாமல் உருவாக்கிவிடலாம்.
ஒவ்வொரு குவிஸ்க்கும் தனித்தனியாக டைட்டில் கொடுத்து பிரித்து
வைத்துக்கொள்ளலாம். கணிதம் என்றால் கணிதவகையான
கேள்விகள் இருக்கும் என்று டைட்டிலில் கொடுக்கலாம்.
ஒரு கேள்விக்கு உதாரணமாக ஐந்து பதில்கள் வரை கொடுத்து
வைத்துக்கொள்ளலாம், இதைத்தவிர ஒவ்வொரு கேள்விக்கும்
Feedback வாங்கிக்கொள்ளலாம். சில குவிஸ் கேள்விகளுக்கு
படம் வைக்க வேண்டியதிருக்கும் அவ்வாறு கேள்வியுடன் படம்
சேர்க்க வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம்.
போட்டித்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் , பட்டதாரிகள்
போன்றவர்கள் இதைப்போல் சிறிதாக குவிஸ் ஒன்றை உருவாக்கி
வைத்து இணையதளத்தில் இருக்கும் நண்பருடன் தன் அறிவை
பகிர்ந்துகொள்ளலாம். பிராக்டிஸ் மற்றும் கிரேடட் என இரண்டு
வசதியும் உள்ளது. உங்கள் இணையதளம் அல்லது பிளாக்-ற்கு
லிங் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். குவிஸ் என்பது எல்லாத்
துறைக்கும் தேவையான ஒன்று கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
இணையதளமுகவரி : http://www.attotron.com/pub/Quizmake.htm
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method          Description

windowOpened()      Invoked when the window is
made visible for the first time
.
windowClosing()   Invoked when the user attempts
to close the window from the
Windows system menu.

windowClosed()      Invoked when the window has
been closed as a result of calling
the dispose() method
.
windowActivated() Invoked when the window is
made active  i.e. the window can
receive keyboard events.

இன்று மார்ச் 7 
பெயர் : ஸ்டான்லி குப்ரிக் ,
மறைந்த தேதி : மார்ச் 7, 1999

ஒரு செல்வாக்குப் பெற்ற அமெரிக்கத்
திரைப்பட இயக்குனரும், திரைக்கதை
எழுத்தாளரும்,தயாரிப்பாளரும் ஆவார்.
இவர் மிகவும் புகழ் பெற்றனவும், சில
சமயங்களில் சர்ச்சைக்கு உரியனவுமான பல படங்களை
இயக்கியுள்ளார். படங்களுக்கான கருப்பொருள்களைத்
தேர்ந்தெடுப்பதில் காட்டும் கவனம், மெதுவாக வேலை
செய்தல், அவரது ஆக்கங்களின் பல்வகைத் தன்மை,
தொழில்நுட்பத் துல்லியம் என்பவை இவருடைய குறிப்பிடத்தக்க
இயல்புகள்.
Read More

Monday, February 15, 2010

சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.

2:49 PM 5
ஆன்லைன் -மூலம் இலவசமாக இன்வாய்ஸ் உருவாக்கலாம் எந்த
மென்பொருளும் தேவையில்லை. நாம் நினைத்தப்படி பில்
உருவாக்கலாம்.பில் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் விபரங்களை
கொடுத்து நாமே எந்த மென்பொருளும் இல்லாமல் உருவாக்கலாம்.
அதோடு நீங்கள் அந்த பில்லை உங்கள் கணினியில் பிடிஎப் ஆக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.உங்கள் சிறிய அலுவலகத்துக்கோ
அல்லது சிறிய பொருள் விற்கும் நிறுவனத்திற்க்கோ சில
நிமிடங்களில் பில் உருவாக்க உதவும் இணையதளம் பற்றி தான்
இந்த பதிவு.இனி இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

இணையதளமுகவரி : http://www.billpdf.com

[caption id="attachment_967" align="aligncenter" width="313" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_968" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_969" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

[caption id="attachment_970" align="aligncenter" width="450" caption="படம் 4"][/caption]

[caption id="attachment_971" align="aligncenter" width="300" caption="படம் 5"][/caption]

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியுள்ளபடி முதலில்
கொடுக்கப்பட்டிருக்கும் பின்கோடை கொடுத்து உள்ளே செல்லவும்.
அடுத்து படம் 2-ல் காட்டியபடி பில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்
தகவல்களை இடதுபக்கம் உள்ள கட்டத்தில் கொடுக்கவும்.அடுத்து பில்
தேதி மற்ற விபரங்களை கொடுக்கவும்.இந்த தகவல்களை கொடுத்து
முடித்தபின்  "Add items" என்ற பட்டனை அழுத்தி இன்வாய்ஸ்
தேர்ந்தெடுக்கவும் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது தேர்ந்தெடுத்தப்பின்
"Save"என்ற பட்டனை அழுத்தவும் அடுத்ததிரையில் பில்
உருவாக்க்கப்பட்டு காட்சியளிக்கும் மேலும் Items add செய்ய மறுபடியும்
Add item என்ற பட்டனை அழுத்தவும் எல்லாம் கொடுத்து முடித்தபின்
தானாகவே பில் உருவாக்கப்பட்டுவிடும் படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது நாம் கொடுத்தபில்லை பிடிஎப் ஆக சேமிக்க படம் 5-ல்
காட்டியபடி File என்பதை தேர்வு செய்து "Download pdf" என்பதை
தேர்வு செய்து சேமித்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் -ல் பிடிஎப்
ஆக பார்க்கலாம்.பில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும்
நம்மவர்களுக்கு இந்த பதிவு உதவும்  என்று நினைக்கிறோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
collection பிரேம்வொர்க் உதவும் நிரல்
Set cannot contain duplicate elements
List is an ordered collection
Map maps keys to values – duplicate keys not allowed.
new Vector(x, y)----x =init capacity,y= capacity
increment

இன்று பிப்ரவரி 15
பெயர் : கலீலியோ கலிலி,
பிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564
இவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான
தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்
மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
"இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும்,
அறிவியலின் தந்தை என்ற வகையிலும் "நவீன வானியலின்
தந்தை" என இவர் அழைக்கப்படுகின்றார்.
Read More

Post Top Ad