சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, February 15, 2010

சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.

ஆன்லைன் -மூலம் இலவசமாக இன்வாய்ஸ் உருவாக்கலாம் எந்த
மென்பொருளும் தேவையில்லை. நாம் நினைத்தப்படி பில்
உருவாக்கலாம்.பில் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் விபரங்களை
கொடுத்து நாமே எந்த மென்பொருளும் இல்லாமல் உருவாக்கலாம்.
அதோடு நீங்கள் அந்த பில்லை உங்கள் கணினியில் பிடிஎப் ஆக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.உங்கள் சிறிய அலுவலகத்துக்கோ
அல்லது சிறிய பொருள் விற்கும் நிறுவனத்திற்க்கோ சில
நிமிடங்களில் பில் உருவாக்க உதவும் இணையதளம் பற்றி தான்
இந்த பதிவு.இனி இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

இணையதளமுகவரி : http://www.billpdf.com

[caption id="attachment_967" align="aligncenter" width="313" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_968" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_969" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

[caption id="attachment_970" align="aligncenter" width="450" caption="படம் 4"][/caption]

[caption id="attachment_971" align="aligncenter" width="300" caption="படம் 5"][/caption]

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியுள்ளபடி முதலில்
கொடுக்கப்பட்டிருக்கும் பின்கோடை கொடுத்து உள்ளே செல்லவும்.
அடுத்து படம் 2-ல் காட்டியபடி பில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்
தகவல்களை இடதுபக்கம் உள்ள கட்டத்தில் கொடுக்கவும்.அடுத்து பில்
தேதி மற்ற விபரங்களை கொடுக்கவும்.இந்த தகவல்களை கொடுத்து
முடித்தபின்  "Add items" என்ற பட்டனை அழுத்தி இன்வாய்ஸ்
தேர்ந்தெடுக்கவும் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது தேர்ந்தெடுத்தப்பின்
"Save"என்ற பட்டனை அழுத்தவும் அடுத்ததிரையில் பில்
உருவாக்க்கப்பட்டு காட்சியளிக்கும் மேலும் Items add செய்ய மறுபடியும்
Add item என்ற பட்டனை அழுத்தவும் எல்லாம் கொடுத்து முடித்தபின்
தானாகவே பில் உருவாக்கப்பட்டுவிடும் படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது நாம் கொடுத்தபில்லை பிடிஎப் ஆக சேமிக்க படம் 5-ல்
காட்டியபடி File என்பதை தேர்வு செய்து "Download pdf" என்பதை
தேர்வு செய்து சேமித்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் -ல் பிடிஎப்
ஆக பார்க்கலாம்.பில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும்
நம்மவர்களுக்கு இந்த பதிவு உதவும்  என்று நினைக்கிறோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
collection பிரேம்வொர்க் உதவும் நிரல்
Set cannot contain duplicate elements
List is an ordered collection
Map maps keys to values – duplicate keys not allowed.
new Vector(x, y)----x =init capacity,y= capacity
increment

இன்று பிப்ரவரி 15
பெயர் : கலீலியோ கலிலி,
பிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564
இவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான
தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்
மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
"இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும்,
அறிவியலின் தந்தை என்ற வகையிலும் "நவீன வானியலின்
தந்தை" என இவர் அழைக்கப்படுகின்றார்.

5 comments:

 1. யூர்கன் க்ருகியர்February 15, 2010 at 8:51 PM

  Thanks!

  ReplyDelete
 2. யூர்கன் க்ருகியர்February 15, 2010 at 9:01 PM

  it comes with $.
  any idea how to use INR ?

  ReplyDelete
 3. விரைவில் இந்திய மதிப்பிலும் வர இருக்கிறது.

  ReplyDelete
 4. send admin@billpdf.com Tamil translations for the following phrases on the invoice / website .. they want to add multi language and currency capabilities..

  Invoice
  Date
  Bill To
  Status
  Terms
  Due Date
  P.O. #
  Qty
  Item
  Cost Per
  Total
  Tax
  Subtotal
  Sales Tax
  Grand Total
  Page


  Add Item
  Delete Invoice
  Save
  View PDF
  Download PDF
  Reload Invoice
  Close


  Color

  admin@billpdf.com

  ReplyDelete

Post Top Ad