(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, January 5, 2011

(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.

வால்பேப்பர் தேடி ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டாம்.
அனைத்து விதமான வால்பேப்பரும் குவாலிட்டியாக தரவிரக்க
உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



கணினிக்கு தேவையான வால்பேப்பர் எல்லா இணையதளங்களிலும்
இலவசமாக கிடைத்தாலும் ஒரு சில தளங்களில் மட்டும் தான்
தரமான குவாலிட்டியான வால்பேப்பர் நமக்கு கிடைக்கிறது. அந்த
வகையில் தரமான வால்பேப்பர் தரவிரக்க நமக்கு உதவியாக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://interfacelift.com

இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எந்த வகையான
வால்பேப்பர் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Search என்ற
பொத்தானை சொடுக்கி வால்பேப்பர்-ஐ தேடி நம் திரையின் அளவு
( Screen)-க்கு தகுந்த மாதிரி எந்த அளவு வேண்டுமோ அந்த
அளவை தேர்ந்தெடுத்துக்கொண்டு Download என்ற பொத்தானை
சொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். நீங்கள் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் திரையின் அளவு என்ன என்பதையும் அதற்கு
தகுந்தாற்போல் வால்பேப்பர்-ஐ Automatic ஆக தேர்ந்தெடுத்து
நமக்கு காட்டும். வால்பேப்பர் மற்றும் High Quality image தேடும்
அனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
பெருமை விரும்பிகள் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை,
பெருமை விரும்பாதவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் அரசினால் வழங்கப்படும் மிகப்பெரிய இலக்கிய
விருது என்ன ?
2.வள்ளுவரின் பெயரை வைத்து திருக்குறளை எவ்வாறு
 அழைக்கின்றனர் ?
3.தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று யார்
அழைக்கப்படுகிறார் ?
4.புத்த சரிதை என்னும் நூலை இயற்றியவர் யார் ?
5.மான் உருவில் வந்து ராமனையும் சீதையையும் பிரித்தவர்
 யார் ?
6.மகாத்மா காந்தியின் சுயசரிதைக்கு என்ன பெயர் ?
7.வான் அறிவியல் துறை வளரப் பாடுபட்டவர் யார் ?
8.இந்தியாவில் திட்டக்குழு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
9.இந்தியா எந்த வகை பொருளாதாரத்தை சேர்ந்தது ?
10.விடுதலைக்கு முன் நாட்டு தேசிய வருமானத்தைக்
 கணக்கிட்டவர் யார் ?
பதில்கள்:
1.ராஜராஜன் விருது,2.வள்ளுவம்,3.பாரதியார்,
4.அசுவ கோஷ்,5.மாரீசன்,6.சத்திய சோதனை,
7.விக்ரம் சாராபாய்,8.1950.9.கலப்புப் பொருளாதாரம்,
10.தாதாபாய் நெளரோஜி.


இன்று ஜனவரி 5 
பெயர் : கால்வின் கூலிஜ் ,
மறைந்த தேதி : ஜனவரி 5, 1933
ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத்
தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில்
இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர்
வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும்
ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில்
இவர் அரசியலில் இறங்கி அதன் பின் ஆளுநர் ஆனார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

11 comments:

  1. @ கேப்டன் டைகர்
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தளம்..!! பதிவிற்கு நன்றி..!!

    ReplyDelete
  4. @ Devarajan
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. நிச்சயமாக இப் பதிவு வால்ல்பபேர் டவுன்லோட் செய்ய மிஹவும் பொருத்தமான தளம்
    -நன்றி வின்மணி..

    ReplyDelete
  7. @ Sadaam-SriLanka
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad