தான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் தாங்கள்
கையால் வரைந்த மற்றும் கணினி துணையுடன் வரைந்த பல
கார்ட்டூன்-களை எளிதாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

எப்போதும் உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது
கிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.எப்படி எல்லாம் குழந்தைகள் கார்ட்டூன்
சித்திரம் வரைந்து ஆன்லைன் மூலம் அதை அனைத்து மக்களிடமும்
எளிதாக கொண்டு சேர்க்கவும் அதை யார் வேண்டுமானாலும்
தரவிரக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.scribbls.com
எந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை
தேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன்
படங்களை எளிதாக தரவிரக்கலாம். சில நேரங்களில் கவிதை
எழுதுபவர்கள் இதே போல் கார்ர்டூன் சித்திரங்களை தங்களின்
கவிதை படைப்புகளில் கூட இடம் பெறச்செய்வதும் உண்டு.
பொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும்
பலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு.
உங்கள் செல்ல குட்டீஸ் வரைந்த கார்டூன் படங்களை
இத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றலாம்.
வின்மணி சிந்தனை
உயர்ந்த சிந்தனை என்பது அடுத்த மனிதனுக்கு தொந்தரவு
செய்யாமல் வேலைகளை செய்வதாகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் பழமையான நாட்டியக்கலை யாது ?
2.பர்மாவின் புதிய பெயர் என்ன ?
3.”சார்மினார்” எங்குள்ளது ?
4.நவம்பர் 14 என்ன தினமாக கொண்டாடப்படுகிறது ?
5.இந்திய நாட்டின் மிகப்பெரிய முதலாளி யார் ?
6.பாபர் என்னும் சொல்லுக்கு என்ன பொருள் ?
7.ஓரிசாவில் சூரியக்கோவில் எங்குள்ளது ?
8.புத்தரின் தனி மருத்துவர் யார் ?
9.கர்ணனின் போரின் சின்னம் யாது ?
10.கவிராஜன் என்னும் பட்டம் பெற்ற மன்னன் யார் ?
பதில்கள்:
1. பரத நாட்டியம்,2.மியான்மர்,3.ஹைதராபாத்,
4.குழந்தைகள் தினம்,5.இந்திய அரசாங்கம்,6.குதிரை,
7.கோனாரக்,8.ஜீவிகா.9.நீலத்தாமரை, 10.சமுத்ர குப்தர்.
இன்று ஜனவரி 4
பெயர் : ஐசக் நியூட்டன் ,
பிறந்த தேதி : ஜனவரி 4, 1643
ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,
அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
ஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்
விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்
இயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்
ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae
Naturalis Principia Mathematica என்னும் நூலை
வெளியிட்டார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

புதிதாக சொல்ல எதுவும் இல்லை.. உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை ..
ReplyDeleteஏற்கனவே கேட்ட கேள்வி தான்..
பாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுக்கும் மென்பொருள் ஏதாவது இருந்தால் தெரியப் படுத்தவும் ..
மிக்க நன்றி சார்!
ReplyDelete@ கேப்டன் டைகர்
ReplyDeleteமிக்க நன்றி, விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
@ எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி
Thanks winmani
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி