ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, January 3, 2011

ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.

நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல
மொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்
இருந்து கண்டு ரசிக்கலாம்  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்
இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்
வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக
ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402  டிவி
சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.tvweb360.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க
வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல
நமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக
பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு
சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து
பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.


வின்மணி சிந்தனை
நாம் முயற்சி செய்வதால் மட்டும் வெற்றி கிடைப்பதில்லை,
விடா முயற்சி செய்வதால் தான் வெற்றி கிடைக்கிறது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஏரி நகரம் என்று எந்த ஊருக்குப் பெயர் ?
2.சவரக்கத்தியை கண்டுபிடித்தவர் யார் ?
3.பெரு நாட்டின் தலைநகர் எது ?
4.உலகின் மிக நீளமான பாதாள ரயில் பாதை எங்குள்ளது ?
5.எத்தனை ஜாமம் கொண்டது ஒரு நாள் ?
6.மூன்று மகுடங்களை அணிந்திருப்பவர் யார் ?
7.மந்த வாயுவுக்கு இன்னொரு பெயர் ?
8.தேனின் வேறு பெயர் என்ன ?
9.கீரைத்தோட்டம் என்னுடைய மருந்துப் பெட்டி என்று
சொன்னவர் யார் ?
10.தேசிய வேதியல் ஆராய்ச்சி கூடம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.உதயப்பூர்,2.ஆதிகால எகிப்தியர்,3.லிமா,4.லண்டன்,
5.8 ஜாமம்,6.போப், 7.ஹீலியம்,8.கொங்கு.
9.லியோ டால்ஸ்டாய், 10.பூனே.


இன்று ஜனவரி 3
பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,
பிறந்ததேதி : ஜனவரி 3, 1740
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்
போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்
போருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக
தன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்
தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. @ praveen
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. @ abbu
    தமிழ் சேனல் ஏதும் இப்பபோது வரவில்லை,
    நன்றி

    ReplyDelete
  3. @ கேப்டன் டைகர்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad